Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மட்டன் கறி உருண்டை குழம்பு ரெசிபி... இந்த மாதிரி ஒரு தடவ செஞ்சு பாருங்க... வீட்ல எல்லாருக்கும் பிடிக்கும்...!
Mutton Kari Urundai Kulambu Recipe in Tamil: அசைவ உணவு வகைகள் பெரும்பாலானவர்களின் விருப்பமான உணவு. அதில் பறப்பது, நடப்பது, நீந்துவது, ஏன் ஊர்வதை கூட சிலர் விரும்பி சாப்பிடுவார்கள். என்ன தான் இருந்தாலும் அதில் மீன், சிக்கன், மற்றும் மட்டன் மட்டுமே முக்கிய பங்கு வகிக்கிறது.
மட்டன் வைத்து நாமும் விதவிதமாக குழம்பு, வறுவல் என செய்திருப்போம். மட்டன் கோலா உருண்டை பலரின் விருப்ப உணவுகளில் ஒன்று. ஆனால் இப்படி மட்டன் கோலா உருட்டை வைத்து ஒரு முறை குழம்பு செய்து பாருங்கள்.

தேவையான பொருள்கள்:
உருண்டை செய்ய:
- கொத்திய ஆட்டுக்கறி - 250 கிராம்
- பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியதைப் பயன்படுத்தவும்)
- மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
- சோம்புத் தூள் - ½ டீஸ்பூன்
- பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
- முட்டை - 1
- பச்சை மிளகாய் - 2 (நீளமாக நறுக்கவும்)
- பூண்டு - 4 பல் (நறுக்கவும்)
- உப்பு - தேவைக்கேற்ப
- எண்ணெய் - பொரிப்பதற்கேற்ப
குழம்பு செய்ய:
- பெரிய வெங்காயம் - 2 (நறுக்கவும்)
- இஞ்சி பூண்டு விழுது - 1 ½ டேபிள்ஸ்பூன்
- பெரிய தக்காளி - 2 (நறுக்கவும்)
- சாம்பார் மிளகாய்த் தூள் - 1 ½ டேபிள்ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்)
- மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
- புதினா இலை - ¼ கப்
- தேங்காய்ப் பால் - 1 கப்
- கொத்தமல்லி இலை - ¼ கப்
- கிராம்பு - 3
- பட்டை - 1 துண்டு (சுமார் 1 அங்குலம்)
- பிரியாணி இலை - 1
- ஏலக்காய் - 2
செய்முறை:
உருண்டை தயார் செய்ய:
- ஆட்டுக்கறியை சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக
கழுவிஎடுத்து கொள்ளவும்.
- அதனுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய்
சேர்க்கவும்.
- பின் மஞ்சள் தூள், சோம்புத் தூள், உப்பு, பொட்டுக்கடலை மாவு,
மற்றும் முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- அதை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய விடவும்.
- பின் உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்து
வைக்கவும்.
குழம்பு தயார் செய்ய:
- வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு,
பட்டை, மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை
வதக்கவும்.
- நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, புதினா, மற்றும்
கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதனுடன் சாம்பார் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மற்றும் தேவையான
அளவு உப்பு சேர்த்து கிளறி வதக்கவும்.
- மசாலா பொருட்கள் நன்றாக வதங்கியதும் தேங்காய் பால் சேர்த்து 5
நிமிடம் கொதிக்க விடவும்.
- பின் பொரித்து வைத்த உருண்டைகளை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில்
கொதிக்க விடவும்.
- கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மட்டன்
கறி உருண்டை குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications