Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: மே 29 முதல் இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
பீட்ரூட் பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 21 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வெற்றிபடிக்கட்டில் ஏறப்போறாங்களாம் -
சனிபகவான் திரிகிரக யோகத்தின் போது நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் -
கிட்னியை பாதுகாக்கும் சத்தான வாழைத்தண்டு தோசை ரெசிபி - செஞ்சு பாருங்க, ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது -
வரதட்சணை கொடுமை: திருமணமான 7 ஆண்டுகளில் நடக்கும் மரணங்கள்! உங்கள் மகளைக் காக்க இந்த சட்டங்கள் தெரியுமா? -
இந்தியா-லண்டன் வரை 11 நாடுகள் வழியாக சென்ற உலகின் நீண்ட பயணத்தின் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா? -
சுக்கிரன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வரதட்சணை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா? புதிய சட்டங்கள் மற்றும் குடும்பத்தினர் செய்ய வேண்டிய மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இதோ! -
மாவிளக்கு மாவு ரொம்ப மிச்சமாகிருச்சா? அதை வைச்சு இந்த மாதிரி பலகாரம் பண்ணுங்க - சூப்பரா இருக்கும்
மட்டன் சில்லி ரோஸ்ட்
இந்த வார இறுதியில் ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட மட்டன் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? இதுவரை நீங்கள் வீட்டில் செய்யாத ஒரு புதிய ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் மட்டன் சில்லி ரோஸ்ட் சரியாக இருக்கும்.
இந்த வார இறுதியில் ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட மட்டன் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? இதுவரை நீங்கள் வீட்டில் செய்யாத ஒரு புதிய ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் மட்டன் சில்லி ரோஸ்ட் சரியாக இருக்கும். இதுவரை நீங்கள் சிக்கன் சில்லி தான் கேட்டிருப்பீர்கள் மற்றும் சுவைத்திருப்பீர்கள். ஆனால் மட்டன் சில்லி ரோஸ்ட் வித்தியாசமாக இருப்பதோடு, மிகவும் ருசியாகவும் இருக்கும். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

உங்களுக்கு மட்டன் சில்லி ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் சில்லி ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத மட்டன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு...
* தேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* சோம்பு - 2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* பூண்டு - 5 பல்
* வரமிளகாய் - 5
செய்முறை:
* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய மட்டனை ஒரு குக்கரில் போட்டு, அத்துடன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, தக்காளி, அரைத்த பச்சை மிளகாய் பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அதில் காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள மட்டனை, அதில் உள்ள நீருடன் சேர்த்து கிளறி, நீர் முற்றிலும் வற்றியதும், அதில் மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான மட்டன் சில்லி ரோஸ்ட் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











