Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
பாய் வீட்டு மட்டன் பிரியாணியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
Muslim Style Mutton Biryani Recipe: உங்கள் வீட்டில் உள்ளோர் பிரியாணி பிரியர்களா? இதனாலேயே உங்கள் வீட்டில் அடிக்கடி பிரியாணி செய்வீர்களா? ஆனால் ஒரே மாதிரி பிரியாணி செய்து போரடித்துவிட்டதா? உங்களுக்கு பாய் வீட்டு பிரியாணியை சுவைக்க ஆசையாக உள்ளதா?
அப்படியானால் இந்த வாரம் பாய் வீட்டு மட்டன் பிரியாணியை உங்கள் வீட்டில் ட்ரை செய்யுங்கள். இந்த பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு பாய் வீட்டு மட்டன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாய் வீட்டு மட்டன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1/2 கிலோ
* பாசுமதி அரிசி - 300 கிராம்
* பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை - 1
* கொத்தமல்லி - 1 கைப்பிடி
* புதினா - 1 கைப்பிடி
* பச்சை மிளகாய் - 6
* பட்டை - 3 துண்டு
* கிராம்பு - 6
* ஏலக்காய் - 4
* அன்னாசிப்பூ - 2
* பிரியாணி இலை - 3
* மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் -
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் நன்கு கழுவி விட்டு, 15 நிமிடம்
ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3-4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி
இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் தயிரை சேர்த்து கிளறி விட வேண்டும். பின் தக்காளியை
சேர்த்து ஒருமுறை வதக்கி விட வேண்டும்.
* அதன் பின் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் மிளகாய் தூள் சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு,
பின் எலுமிச்சை சாற்றினை சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து, பின் 3/4
டம்ளர் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சாதத்தை வடிக்க
தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 பிரியாணி இலை, 3
கிராம்பு, 1 துண்டு பட்டை, சிறிது புதினா சேர்த்து, அதன் பின் ஊற
வைத்த அரிசியை அப்படியே சேர்த்து, சாதத்திற்கு தேவையான அளவு உப்பு
சேர்த்து கலந்து, 10 நிமிடம் சாதத்தை வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, சாதத்தில் உள்ள நீரை ஒரு பாத்திரத்தில்
வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வடிகட்டிய நீரை கீழே ஊற்றி
விட வேண்டாம். அதைக் கொண்டு தான் தம் போடப் போகிறோம்.
* நீரை வடிகட்டிய பின், குக்கரில் உள்ள மட்டனை அப்படியே சாதத்துடன்
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து, அதன் மேல் பிரியாணி
பாத்திரத்தை வைத்து, காற்று புகாதவாறு ஒரு தட்டு கொண்டு மூடி, அதன்
மேல் அரிசி வடிகட்டிய நீர் பாத்திரத்தை வைத்து, குறைவான தீயில் வைத்து
20 நிமிடம் தம் போட்டு இறக்கினால், சுவையான பாய் வீட்டு மட்டன்
பிரியாணி தயார்.
Image Courtesy: Cook with Sharmila



Click it and Unblock the Notifications









