முட்டைக்கோஸ் இருந்தா.. மழை நேரத்துல இப்படியொரு பக்கோடா செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்...

Posted By:

Cabbage Pakoda Recipe In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. இப்படி மழை பெய்யும் போது நிறைய பேருக்கு சூடான காபி, டீயுடன் நன்கு மொறுமொறுவென்றும், சூடாகவும் ஏதாவது சாப்பிட தோன்றும். உங்கள் வீட்டில் இருப்பவர்களும் இப்படிப்பட்டவர்கள் தானா? எப்போது மழை பெய்தாலும் சாப்பிட ஏதாவது கேட்பார்களா?

அப்படியானால் அப்போது வழக்கமாக செய்யும் வெங்காய பக்கோடா அல்லது பஜ்ஜி அல்லது வடையை செய்து கொடுப்பதற்கு பதிலாக, வீட்டில் முட்டைக்கோஸ் இருந்தால், அதைக் கொண்டு பக்கோடா செய்து கொடுங்கள். இந்த முட்டைக்கோஸ் பக்கோடா மிகவும் சுவையானது மட்டுமின்றி, செய்வதற்கு மிகவும் சுலபமானதும் கூட.

Muttaikose Pakoda How To Make a Cabbage Pakoda Recipe

உங்களுக்கு முட்டைக்கோஸ் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முட்டைக்கோஸ் - 250 கிராம் (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 1 1/2 கப்
* முந்திரி - 100 கிராம்
* பச்சை மிளகாய் -
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய முட்டைக்கோஸை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் உப்பு, மிளகுத் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை தெளித்து, உதிர்த்து விடும் அளவில் ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், முந்திரி பருப்பை சேர்தது பொன்னிறமாக ப்ரை செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதே எண்ணெயில் பிசைந்து வைத்துள்ள பக்கோடா மாவை உதிர்த்து விட்டு, பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இதேப் போன்று மீதமுள்ள அனைத்து பக்கோடா மாவையும் ப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே எண்ணெயில் பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி போட்டு ப்ரை செய்து எடுத்து, பக்கோடாவுடன் சேர்க்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து ப்ரை செய்து எடுத்து, அதையும் பக்கோடாவுடன் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக ஒரு பாத்திரத்தில் ப்ரை செய்த பக்கோடா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரி ஆகியவற்றை எடுத்து கிளறிவிட்டால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான முட்டைக்கோஸ் பக்கோடா தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, July 17, 2025, 17:33 [IST]
Desktop Bottom Promotion