Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
Muttaikose Masala Fry Recipe in Tamil: நம் வீடுகளில் சாம்பார், ரசம் போன்றவை வைக்கும் போது அதற்கு பொரியல் செய்வது என்பது மிகவும் எழுதப்படாத விதியாகும். பொதுவாக தமிழ்நாடு குடும்பங்களில் பொரியல் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது முட்டைக்கோஸ் பொரியல்தான். வீடுகளில் மட்டுமல்ல கல்யாண வீடுகளில் கூட பொரியல் என்றால் முதலில் செய்யப்படுவது முட்டைக்கோஸ் பொரியல்தான்.
முட்டைக்கோஸ் பொரியல் சுவையானது, ஆரோக்கியமானது என்பதையும் தாண்டி செய்வதற்கு மிகவும் எளிதானதும் கூட. ஆனால் எவ்வளவு காலத்திற்குத்தான் ஒரே மாதிரி முட்டைக்கோஸ் பொரியலை செய்வது. சில பொருட்களை முட்டைகோஸ் பொரியலுடன் சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவை பலமடங்கு அதிகரிக்கும். பொதுவாக முட்டைக்கோஸ் பொரியல் காரமில்லாமல் இருக்கும், ஆனால் இப்போது நாம் பார்க்கப்போவது காரசாரமான முட்டைக்கோஸ் மசாலா பொரியலாகும்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் மசாலா பொரியல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் மசாலா பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நறுக்கிய முட்டைக்கோஸ் - 2 அல்லது 3கப்
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- பூண்டு - 6 பல் பொடியாக நறுக்கியது
- பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் நறுக்கியது)
- கரம் மசாலா - 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் - ¼ ஸ்பூன்
- தனியா தூள் - 1 ஸ்பூன்
- தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
- சர்க்கரை - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
செய்முறை:
- ஒரு கடாயில் சமையல் எண்ணெயை ஊற்றி சூடாக்கி அதில் கடுகை போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் அதில் பெருங்காயம், சீரகம் மற்றும் நறுக்கிய பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- சீரகம் வதங்கி, பூண்டு லேசாகப் பொன்னிறமாகும் வரை ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது மென்மையாக கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா ஆகிய பொடி மசாலாக்களைச் சேர்க்கவும்.
- சிறிதளவு தண்ணீர் தெளித்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை சுமார் 2 நிமிடங்களுக்கு மசாலாக்களை வதக்கவும்.
- பின்னர், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு கிளறவும். பின் சர்க்கரையைச் சேர்த்து, மூடி வைத்து, தக்காளிநன்கு நன்கு மென்மையாகும் வரை சமைக்கவும்.
- தக்காளி நன்கு வெந்ததும் நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் தேவையான அளவு உப்பைச் சேர்க்கவும். அனைத்தையும் நன்கு கலந்து, முட்டைக்கோஸ் மென்மையாகி முழுமையாக வேகும் வரை, மூடி வைத்து மிதமான தீயில் சமைக்கவும்.
- தண்ணீர் நன்றாக வற்றி முட்டைக்கோஸ் வெந்ததும் உப்பு சரிபார்த்து நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அடுப்பை அணைக்கவும்.
- இந்த காரமான முட்டைக்கோஸ் மசாலா சூப்பரான சைடிஷாக இருப்பதுடன் இதை சாதத்தில் பிசைந்தும், தோசை, சப்பாத்திக்கு சைடிஷாக வைத்தும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications