Latest Updates
-
கல்யாண வீட்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அக்டோபர் 13 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமலை கொட்டப்போகுதாம் - என்ஜாய் பண்ணுங்க -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கப் சுண்டல் இருந்தா இந்த சத்தான பாலக் சன்னா மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
கீ போர்டில் Space பட்டன் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
Navaratri 2026: நவராத்திரியின் போது இந்த 7 செயல்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க - அதான் உங்களுக்கு நல்லது -
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்..
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி கார குழம்பு செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும்
Muttaikose Kara Kuzhambu Recipe in Tamil: மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க வேண்டுமா? அதே சமயம் நல்ல சுவையான மற்றும் வீடே மணக்கும் அற்புதமான குழம்பை சாதத்திற்கு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் உள்ளதா? அப்படியானால் அந்த முட்டைக்கோஸை வைத்து தெருவே மணக்கும் அளவில் ஒரு சுவையான கார குழம்பை செய்யுங்கள்.
பொதுவாக முட்டைக்கோஸை வைத்து பொரியல் அல்லது பொரிச்ச குழம்புதான் செய்வார்கள். ஆனால் முட்டைக்கோஸை வைத்து சூப்பரான காரக்குழம்பு செய்யலாம் என்பது பலரும் அறியாதது. இந்த முட்டைக்கோஸ் கார குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த குழம்பை செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் கார குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் கார குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நறுக்கிய முட்டைக்கோஸ் - ஒன்றரை கப்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க
வறுத்து அரைக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 1
- பழுத்த தக்காளி - 2
- தனியா - 1 ஸ்பூன்
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- மிளகு - 1/4 ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் - 2
- பூண்டு பல் - 3
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
- சாம்பார் தூள் - 1/2 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- பெரிய வெங்காயம் - 1
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
செய்முறை:
- முட்டைக்கோஸைக் நன்றாக கழுவி, மெல்லிய துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி உரித்த சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி, சோம்பு , தனியா, வர மிளகாய் மற்றும் பிற பொருட்களை சேர்த்து வதக்கவும், இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி ஆற வைக்கவும்.
- ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். பின் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் முட்டைக்கோஸை சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள் தூள் மற்றும் அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 1 கப் தண்ணீர் சேர்த்து, கிரேவி கெட்டியாகி அதன் பச்சை வாசனை நீங்கும் வரை சில நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- குழம்பு நன்கு கெட்டியானதும் கொத்தமல்லி இலையை வைத்து அலங்கரிக்கவும்.
- இது சாதத்துடன் சாப்பிட மட்டுமின்றி இட்லி, தோசைக்கும் சூப்பர் காம்பினேஷனாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
