Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
முட்டை மசாலாவை ஒருடைம் இந்த மாதிரி செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Muttai Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா? எப்போதும் முட்டையை ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அதுவும் சாதத்திற்கு என்று கிரேவி, பொடிமாஸ் என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை முட்டையைக் கொண்டு மசாலா செய்யுங்கள். இந்த முட்டை மசாலா ரசம் சாதம், தயிர் சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
மேலும் இதை சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். இப்படி முட்டையைக் கொண்டு மசாலா செய்தால், வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். முக்கியமாக இந்த முட்டை மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இது பேச்சுலர்கள் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு முட்டை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3/4 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 2 (இரண்டாக வெட்டிக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3/4 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கறி மசாலா தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* முட்டை - 5-7
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் முட்டைகளை வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* முட்டைகள் குளிர்ந்ததும், அதன் ஓட்டை நீக்கிவிட்டு, வெள்ளை கருவை
தனியாக எடுத்து, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் முட்டையின்
மஞ்சள் கருவை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பெரிய
வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி, வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கறி மசாலா தூள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள்
சேர்த்து கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, பச்சை வாசனை போக வேக வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் துண்டுகளாக்கி வைத்துள்ள முட்டைகளை சேர்த்து,
அத்துடன், முட்டையின் மஞ்சள் கருவை முழுமையாக சேர்த்து நன்கு கிளறி 3
நிமிடம் வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான முட்டை
மசாலா தயார்.



Click it and Unblock the Notifications
