Latest Updates
-
தலைமுடி வறண்டும், அதிக சிக்கலுடனும் இருக்கா? அப்ப இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் 1 முறை போடுங்க.. -
12 ராசிக்காரர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் ஸ்டைல் எப்படி இருக்கும்? உங்க ராசிப்படி நீங்க எப்படின்னு பாருங்க.. -
எலுமிச்சை தோலை இனி குப்பையில் போடாதீங்க... இந்த 5 விஷயங்களுக்கு பயன்படுத்துங்க! -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - இப்படி செய்யுங்க.. நாக்குல அரிப்பே ஏற்படாது! -
இரத்த சர்க்கரை குறையணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 10 காய்கறிகளை சாப்பிடுங்க.. -
டிசம்பர் மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
தேங்காய் தோசையும், முருங்கைக்கீரை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 26, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க குடும்பத்தில் புயலடிக்கப் போகுதாம் -
18 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் கேது: 2028 வரை இந்த 3 ராசிக்காரங்கள யாராலும் அசைக்க முடியாது! -
திரிகிரக யோகம் சிம்ம ராசியில் உருவாவதால் வெற்றிகளையும், பணத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
முட்டையை எப்பவும் ஒரே மாதிரி மசாலா செய்யாம.. ஒருடைம் இப்படி கீமா மசாலா செய்யுங்க..
Muttai Kheema Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு அடிக்கடி முட்டை சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் முட்டையை எப்போதும் ஒரே மாதிரி தான் சைடு டிஷ் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் முட்டை சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் முட்டை கீமா மசாலா செய்யுங்கள். இந்த மசாலாவின் ஸ்பெஷலே முட்டையை வேக வைத்து அதை துருவி செய்வதாகும். இந்த சுவையில் முட்டையை சமைத்து வீட்டில் உள்ளோருக்கு கொடுக்கும் போது, வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த முட்டை கீமா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கீமா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (இரு துண்டுகளாக்கப்பட்டது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பாவ் பாஜி மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* வேக வைத்து துருவிய முட்டை - 4
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, இரண்டு
துண்டுகளாக்கப்பட்ட பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அத்துடன் பொடியாக
நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள்,
பாவ் பாஜி மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை
வாசனை போக மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, 5 நிமிடம் பச்சை வாசனை போக
கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்து துருவிய முட்டையை சேர்த்து கிளறி, 3
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான முட்டை
கீமா மசாலா தயார்.



Click it and Unblock the Notifications
