Latest Updates
-
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க..
முட்டையை வெச்சு ஒருவாட்டி இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அள்ளும்...
Muttai Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா? அதுவும் முட்டையைக் கொண்டு குழம்பு, கிரேவி, மசாலா என்று செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? இப்படி எப்போதும் ஒரே மாதிரி செய்து போரடித்துவிட்டதா?
அப்படியானால் ஒருமுறை முட்டை கிரேவியை இந்த பக்குவத்தில் செய்யுங்கள். இப்படி முட்டை கிரேவி செய்யும் போது, அதை சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்தும் சாப்பிடலாம். இந்த முட்டை கிரேவி க்ரீமியாக இருப்பதால், வீட்டில் உள்ளோர் அனைவருக்குமே பிடிக்கும்.

உங்களுக்கு முட்டை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 2 இன்ச்
* பச்சை மிளகாய் - 2
* முந்திரி - 10
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - சிறிது
ப்ரை செய்வதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* வேக வைத்த முட்டை - 6
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 5
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4
* மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளிப்பில்லாத கெட்டி தயிர் - 1/4 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி,
வெங்காயம், தக்காளி, சிறிது கொத்தமல்லி சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், தீயைக் குறைத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள்,
உப்பு சேர்த்து கிளறி, வேக வைத்த முட்டைகளை எடுத்து ஆங்காங்கு கீறி
விட்டு சேர்த்து, நன்கு ப்ரை செய்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து மற்றொரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள்
ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, எண்ணெய் பிரியும்
வரை வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில்
வைத்து எண்ணெய் பிரியும் வரை கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளிப்பில்லாத தயிரை நன்கு அடித்து விட்டு சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கிளறி, மிதமான
தீயில் வைத்து 10 நிமிடம் மூடி வைத்து நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து ப்ரை செய்து வைத்துள்ள
முட்டைகளை சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து
இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான முட்டை கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications