Latest Updates
-
ராகி ரவா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 05, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வெற்றிகளை குவிக்கப் போறாங்களாம் -
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்!
காளான் பெப்பர் ப்ரை
அடிக்கடி உங்கள் வீட்டில் காளானை வாங்கி செய்வீர்களா? ஆனால் ஒரே மாதிரி காளானை சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை 20 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் காரசாரமான காளான் பெப்பர் ப்ரை செய்யுங்கள்.
காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அடிக்கடி உங்கள் வீட்டில் காளானை வாங்கி செய்வீர்களா? ஆனால் ஒரே மாதிரி காளானை சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை 20 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் காரசாரமான காளான் பெப்பர் ப்ரை செய்யுங்கள். இது சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு காளான் பெப்பர் ப்ரையின் எளிய செய்முறையை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் பெப்பர் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு..
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
காளான் ரோஸ்ட்டிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 3
* காளான் - 250 கிராம்
* குடைமிளகாய் - 1
* தண்ணீர் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம் மற்றும் சோம்பு ஆகியவற்றை போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் காளானை சேர்த்து நன்கு கிளறி, குடைமிளகாயை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த பொடி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் 10 நிமிடம் ரோஸ்ட் செய்ய வேண்டும்.
* இறுதியாக மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் நெய் சேர்த்து உருகியதும், கடுகு, பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து காளானில் ஊற்றி கிளறி இறக்கினால், காளான் பெப்பர் ப்ரை தயார்.
Image Courtesy: steffisrecipes



Click it and Unblock the Notifications

