Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
காளான் வெச்சு எப்பவும் கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி பாயா செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
Mushroom Paya Recipe In Tamil: நைட் உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு காளான் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதுவும் கிரேவி செய்ய போகிறீர்களா? அப்படியானால் காளானைக் கொண்டு கிரேவி செய்யாமல், ஒருமுறை பாயா செய்யுங்கள்.
இந்த காளான் பாயா வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த பாயா சப்பாத்தி, இடியாப்பம், ஆப்பம், தோசை போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

உங்களுக்கு காளான் பாயாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் பாயா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 200 கிராம்
அரைப்பதற்கு...
* முந்திரி - 7-8
* கசகசா - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1/2 கப்
* பச்சை மிளகாய் - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
வதக்குவதற்கு...
* வெண்ணெய் - சிறிது
* உப்பு - சிறிது
* மிளகுத் தூள் - சிறிது
பாயாவிற்கு...
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் முந்திரி மற்றும் கசகசாவை நீரில் சிறிது நேரம் ஊற
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் காளானை சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு மற்றும் ஊற
வைத்துள்ள முந்திரி மற்றும் கசகசாவை நீருடன் அப்படியே சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து
உருகியதும், அதில் வெட்டி வைத்துள்ள காளானை சேர்த்து, மிளகுத் தூள்
மற்றும் உப்பு தூவி நன்கு சிறிது நேரம் வதக்கி ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பட்டை,
கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் தக்காளியை சேர்த்து, மிளகுத் தூள் தூவி, தக்காளி மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கி வைத்துள்ள காளான் மற்றும் அரைத்து வைத்துள்ள
தேங்காய் விழுதை சேர்த்து, 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து,
இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான காளான் பாயா தயார்.



Click it and Unblock the Notifications