Latest Updates
-
தொடர்ந்து 14 நாட்கள் முட்டை சாப்பிடுவதால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
உலகில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் பழமையான கரன்சிகள் - எந்த நாட்டு பணம் முதலிடத்தில் இருக்கு தெரியுமா? -
செப்டம்பர் 17-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும்.. தக்காளி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 செப்டம்பர் 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க..
கர்நாடகா ஸ்டைல் மஷ்ரூம் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
Mushroom Donne Biryani Recipe in Tamil: பெரும்பாலான மக்களுக்கு பிடித்த உணவு எதுவென்று கேட்டால் உடனே நினைவிற்கு வருவது பிரியாணிதான். அந்த அளவிற்கு பிரியாணி நம் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு உணவாக மாறியுள்ளது. பிரியாணி என்றாலே மட்டன் அல்லது சிக்கன் பிரியாணிதான். ஆனால் எல்லா நேரமும் இதை வைத்தே பிரியாணி செய்ய முடியாதல்லவா?

உங்களுக்கு காளான் என்றால் பிடிக்குமா? அப்ப அதை வைத்து சூப்பரான ஒரு பிரியாணியை செஞ்சு பாருங்க. அதுவும் வழக்கமான பிரியாணி மாதிரி இல்லாம கர்நாடகா பேமஸ் தொன்னெ ஸ்டைலில் காளான் பிரியாணி செஞ்சு பாருங்க. இந்த பிரியாணி நாம வழக்கமா சாப்பிடுற பிரியாணி மாதிரி இல்லாம வித்தியாசமா சூப்பரா இருக்கும். இந்த பிரியாணி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிச்ச சுவையில் இருக்கும்.
உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் காளான் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா காளான் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் சீரக சம்பா அரிசி
மேரினேட் செய்ய:
- 200 கிராம் காளான்
- 1/4 கப் தயிர்
- 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் மல்லித் தூள்
அரைக்க வேண்டியவை:
- 1/2 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 2 கிராம்பு
- 1 இன்ச் பட்டை
- 1/4 ஸ்பூன் மிளகு
- 2 பச்சை மிளகாய்
- 1/2 கப் பெரிய வெங்காயம்
- 5 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 1 கப் கொத்தமல்லி இலைகள்
- 1 கப் புதினா இலைகள்
- 1/2 ஸ்பூன் சீரகம்
தாளிக்க:
- 1 ஸ்பூன் கடலை எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- முழு கரம் மசாலா
- 1/2 கப் வெங்காயம்
- 2 கப் தண்ணீர்
- 1 ஸ்பூன் நெய்
செய்முறை:
- முதலில், சீரகச் சம்பா அரிசியை நன்றாக கழுவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- காளானை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதனுடன் தயிர், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஊறவைக்கவும்; 10 நிமிடங்கள் அப்படியே விடவும்.
- ஒரு கடாயில் கடலை எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். பட்டை, கிராம்பு, மிளகு, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை வதக்கவும்.
- பின்னர் கொத்தமல்லி இலைகள், கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து வதக்கி ஆறவைத்து அரைக்கவும்.
- பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கரம் மசாலாவை வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- இப்போது அரைத்த கலவை மற்றும் ஊறவைத்த காளானைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- அதன்பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
- பாத்திரத்தை மூடி வைத்து 5 நிமிடங்கள் சமைக்கவும்.
- அதன்பின் மூடியைத் திறந்து நன்றாகக் கிளறி, நெய் சேர்க்கவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாகக் கிளறவும்.
- ஒரு தட்டைக் கொண்டு மூடி, அதன் மேல் ஒரு கனமான பொருளை வைக்கவும்.
- 15 நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்கவும்.
- அதன்பின் பாத்திரத்தைத் திறந்து, சாதத்தை மெதுவாகக் கிளறினால் மணமணக்கும் கர்நாடகா ஸ்டைல் தொன்னெ மஷ்ரூம் பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications
