Latest Updates
-
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம்
காளான் வாங்குனா இந்த மாதிரி ஒருடைம் பிரியாணி செய்யுங்க.. சிக்கன், மட்டன் பிரியாணியே தோத்துடும்...
Mushroom Biryani Recipe In Tamil: மதியம் எப்போதும் சாம்பார், குழம்பு செய்து போரடித்துவிட்டதா? உங்களுக்கும் சமையலறையில் நீண்ட நேரம் இருக்க பிடிக்கவில்லையா? உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா?
உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியானால் அந்த காளானைக் கொண்டு பிரியாணியை செய்யுங்கள். இந்த பிரியாணியானது சிக்கன், மட்டன் பிரியாணியையே தோற்கடிக்கும் வகையில் ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு காளான் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 1 1/2 கப் அல்லது 300 கிராம்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப்பூ - 1
* கிராம்பு - 4
* பட்டை - சிறிய துண்டு
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் வெட்டியது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* காளான் - 200 கிராம் (நறுக்கியது)
* உப்பு - தேவையான அளவு
* தண்ணீர் - 2 1/4 கப்
அரைப்பதற்கு...
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 6 பல்
* பச்சை மிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் 3 முறை கழுவிவிட்டு, பின் அரிசி
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, ஏலக்காய், பிரியாணி இலை,
அன்னாசிப்பூ, கிராம்பு, பட்டை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும். வெங்காயம் வதங்குவதற்குள் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு,
கொத்தமல்லி, பச்சை மிளகாய், புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் அரைத்து வைத்துள்ள விழுதை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா ஆகியவற்றை
சேர்த்து குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் தயிரை சேர்த்து
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் காளானை துண்டுகளாக்கி சேர்த்து, சிறிது உப்பு தூவி,
நீர்விட்டு வரும் வரை கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் 2 1/4 கப் நீரை ஊற்றி கிளறி, நீரை கொதிக்க வைக்க
வேண்டும்.
* நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள பாசுமதி
அரிசியை சேர்த்து கிளறி, ஒரு கொதி விட வேண்டும்.
* பின் குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து 1 விசில் விட்டு இறக்க
வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான காளான்
பிரியாணி ரெடி.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications