Latest Updates
-
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்..
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்..
Murungakeerai Thokku Recipe In Tamil: முருங்கைக்கீரை இரும்புச்சத்து அதிகம் நிறைந்தது. வாரம் குறைந்தது ஒருமுறையாவது முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை வருவது தடுக்கப்படும்.

பொதுவாக முருங்கைக்கீரையை வாங்கினால், அதைக் கொண்டு சாம்பார், பொரியல் என்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இந்த முருங்கைக்கீரையைக் கொண்டு தொக்கும் செய்யலாம். இப்படி முருங்கைக்கீரையை தொக்கு செய்து, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த தொக்கு செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு இந்த முருங்கைக்கீரை தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தனி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 8 பல் (நறுக்கியது)
* அரைத்த விழுது
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* புளிச்சாறு - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் நறுக்கிய 1 பெரிய வெங்காயம், பூண்டு,
சீரகம், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் தனி மிளகாய் தூள் சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பெருங்காயத் தூள், பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் எண்ணெய்
பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் 2 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து கிளறி, 5
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது புளிச்சாற்றினை சேர்த்து கிளறி, 5 நிமிடம் நன்கு
பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முருங்கைக்கீரை
தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications
