Latest Updates
-
இந்த 4 ராசி குழந்தைகள் ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க குழந்தை ராசி இதுல இருக்கா? -
இதுல உங்களுக்குப் பிடித்த ஒரு கண்ணைத் தேர்வு செய்யுங்க.. உங்கள் ஆளுமையின் ரகசியத்தை சொல்றோம்.. -
Expiry Date மற்றும் Best Before உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? இது தெரியாம எந்த பொருளையும் வாங்காதீங்க -
2027-ல் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் அசுர வளர்ச்சியை காண்பார்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உலகின் மிகவும் விலையுயர்ந்த உப்பு எது தெரியுமா? இந்த உப்பின் விலை தெரிஞ்ச மயக்கமே போட்ருவீங்க... -
செட்டிநாடு வெண்டைக்காய் பச்சடி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
1 கப் தயிரும், 10 வர மிளகாயும் இருந்தா இந்த ராஜஸ்தானி பூண்டு சட்னியை செய்யுங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
மாரடைப்பு வருவதற்கு முன்பே தென்படும் 7 எச்சரிக்கை அறிகுறிகள்! அலட்சியம் வேண்டாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
இந்தியாவின் 'உருளைக்கிழங்கு தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
நவம்பர் 22-ல் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது!
1 கைப்பிடி முருங்கைக்கீரையும், சீஸும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Murungaikeerai Cheese Balls Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல சத்தான, அதே சமயம் சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு சீஸ் பால்ஸ் பிடிக்குமா? அந்த சீஸ் பால்ஸை சத்தான முறையில் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் முருங்கைக்கீரையை சேர்த்து சீஸ் பால்ஸ் செய்து கொடுங்கள். முக்கியமாக இந்த சீஸ் பால்ஸை எண்ணெயில் பொரிப்பதற்கு பதிலாக, பணியாரக் கல்லில் அளவான எண்ணெய் ஊற்றி வேக வைத்து கொடுங்கள்.

உங்களுக்கு இந்த முருங்கைக்கீரை சீஸ் பால்ஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை சீஸ் பால்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிது (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது
* பன்னீர் - 100 கிராம் (துருவியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* சீஸ் துண்டுகள் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் மைதா மாவு, அரிசி மாவு, கடலை மாவு ஆகியவற்றை எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் மற்றும்
துருவிய இஞ்சியை சேர்க்க வேண்டும்.
* பின்னர் அதில் கொத்தமல்லியை சேர்த்து, பன்னீரைத் துருவி சேர்த்து
முதலில் நன்கு கைளால் பிசைந்து விட வேண்டும்.
* ஒருவேளை நீர் தேவைப்பட்டால் மட்டும் கொஞ்சமாக நீரைத் தெளித்து
பிசைந்து கொள்ள வேண்டும். அதிக நீரை ஊற்றிவிட வேண்டாம்.
* மாவானது உருண்டை பிடிக்க வந்துவிட்டால், சரியான பதத்தில் உள்ளது
என்று அர்த்தம்.
* அதன் பின் சிறிது மாவை எடுத்து தட்டி, நடுவே ஒரு சிறிய சீஸ் துண்டை
வைத்து அப்படியே உருட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து
மாவையும் சீஸ் துண்டுகளை வைத்து உருட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, குழிகளில் சிறிது
எண்ணெய் ஊற்றி சூடானதும், உருண்டைகளை குழிகளில் போட்டு, மிதமான தீயில்
வைத்து 5 நிமிடம் வேக வைத்து, பின் திருப்பி விட்டு 3 நிமிடம் வேக
வைத்து எடுத்தால், சுவையான முருங்கைக்கீரை சீஸ் பால்ஸ் தயார்.



Click it and Unblock the Notifications
