Latest Updates
-
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
செவ்வாய் ரிஷப ராசி செல்வதால் ஆகஸ்ட் மாதம் வரை இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ!
மதியம் சீக்கிரம் சமையலை முடிக்கணுமா? அப்ப முருங்கைக்காய் வெச்சு இப்படி கார குழம்பு செய்யுங்க...
Drumstick Kara Kuzhambu Recipe In Tamil: மதிய வேளையில் சிம்பிளாகவும், அதே சமயம் சீக்கிரமாகவும் ஏதாவது ஒரு குழம்பு செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் முருங்கைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த முருங்கைக்காய் கொண்டு கார குழம்பு செய்யுங்கள். இந்த முருங்கைக்காய் கார குழம்பு 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
உங்களுக்கு முருங்கைக்காய் கார குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் கார குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 4-5 பல்
* தக்காளி - 1
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5-6 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்காய் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி,
துருவிய தேங்காய், புளி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சீரகம், மிளகு, மல்லித் தூள் சேர்த்து சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூளை சேர்த்து குறைவான தீயில் வைத்து, சிறிது
நேரம் வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் சிறிது நீரை ஊற்றி, பெருங்காயத் தூள் சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக துண்டுகளாக்கப்பட்ட முருங்கைக்காயை சேர்த்து கிளறி, மிதமான
தீயில் வைத்து, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க வைத்து இறக்கி,
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான முருங்கைக்காய் கார குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications