Latest Updates
-
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்
2 முருங்கைக்காய் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்தி-ன்னு எல்லாத்தும் அள்ளும்..
Murungaikai Gravy Recipe In Tamil: தினமும் ஒவ்வொரு வேளையும் என்ன சமைப்பது என்று முடிவெடுப்பது பெரிய வேலையாக உள்ளதா? அதுவும் மதிய வேளை வந்துவிட்டால், சாதத்துக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று முடிவெடுக்க முடியவில்லையா? உங்கள் வீட்டில் முருங்கைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த முருங்கைக்காயைக் கொண்டு அற்புதமான கிரேவி செய்யுங்கள்.

இந்த முருங்கைக்காய் கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஒருமுறை இந்த கிரேவியை செய்தால், பின் வாரம் ஒருமுறை இந்த கிரேவியை செய்ய சொல்லி உங்கள் வீட்டில் உள்ளோர் கேட்பார்கள்.
இந்த முருங்கைக்காய் கிரேவி குறித்து மெட்ராஸ் விருந்து என்னும் யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த முருங்கைக்காய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* தண்ணீர் - சிறிது
கிரேவிக்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 2 (லேசாக அரைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (அரைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீர் மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்காய் - 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு,
ஏலக்காய், மல்லி, வேர்க்கடலை, துருவிய தேங்காய், கசகசா ஆகியவற்றை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் புளியை
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, மசாலாவை தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் லேசாக அரைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள்,
காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி,
குறைவான தீயில் வைத்து, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் முருங்கைக்காயை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி கிளறி மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி,
கொத்தமல்லியைத் தூவி கிளறி, மூடி வைத்து 7-8 நிமிடம் நன்கு கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான முருங்கைக்காய் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications