Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
முருங்கைக்காயை வெச்சு ஒருவாட்டி இந்த குழம்பை செய்யுங்க.. குண்டா சோறு நொடியில் காலியாயிடும்...
Drumstick Kara Kulambu Recipe In Tamil: மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க வேண்டுமா? அதே சமயம் நல்ல சுவையான மற்றும் வீடே மணக்கும் அற்புதமான குழம்பை சாதத்திற்கு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த முருங்கைக்காயைக் கொண்டு தெருவே மணக்கும் அளவில் ஒரு சுவையான கார குழம்பை செய்யுங்கள்.
இந்த முருங்கைக்காய் கார குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த குழம்பை செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு முருங்கைக்காய் கார குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் கார குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 4- பல்
* தக்காளி - 1
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2
* மல்லித் தூள் - 1 1/2
* புளி - சிறிய துண்டு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 5-6 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* முருங்கைக்காய் - 2
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு பற்கள்,
தக்காளி, துருவிய தேங்காய், சீரகம், மிளகு, மல்லித் தூள் மற்றும்
சிறிய துண்டு புளியை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய 5-6 சின்ன வெங்காயத்தை சேர்த்து,
கறிவேப்பிலை தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூளை சேர்த்து குறைவான தீயில் வைத்து வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, ஒரு நிமிடம்
பச்சை வாசனை போக வதக்கி, பின் குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி,
பெருங்காயத் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி 5 நிமிடம் கொதிக்க
வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் துண்டுகளாக்கி வைக்கப்பட்ட முருங்கைக்காயை சேர்த்து
கிளறி, உப்பு சுவை பார்த்து, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான முருங்கைக்காய் கார குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications











