Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
முருங்கைக் கீரையை எப்பவும் பொரியல் தான் செய்வீங்களா? இனி குழம்பு செய்யுங்க.. செமயா இருக்கும்..
Murungai Keerai Kuzhambu Recipe In Tamil: வாரம் ஒருமுறை கீரையை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் கீரையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. அதுவும் முருங்கைக்கீரை எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு கீரை. இந்த கீரையை பெரும்பாலானோர் பொரியல் செய்து தான் சாப்பிடுவார்கள்.
ஆனால் அடுத்தமுறை முருங்கைக்கீரையை பொரியல் செய்யாமல், அதைக் கொண்டு குழம்பு செய்யுங்கள். இந்த முருங்கைக்கீரை குழம்பு சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்கீரை குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
அரைப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* மல்லி - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 5 பல்
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
குழம்பிற்கு..
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* முருங்கைக்கீரை - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முருங்கைக்கீரையை கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரில் பாசிப்பருப்பைக் கழுவிப் போட்டு, அதில் 1 1/2
கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு
இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மல்லி, மிளகு, வரமிளகாய், சீரகம், சோம்பு,
கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து 2-3 நிமிடம் நன்கு
வதக்க வேண்டும். அதன் பின் மஞ்சள் தூள், துருவிய தேங்காயை சேர்த்து 2
நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு 1/2 கப் நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் முருங்கைக்கீரையை சேர்த்து 2-3 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அரைத்த விழுதை சேர்த்து, குழம்பிற்கு தேவையான அளவு நீரை
ஊற்றி கிளறி, 1 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க
வேண்டும்.
* அதன் பின் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை மசித்து சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 5-10
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முருங்கைக்கீரை குழம்பு
தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications