Latest Updates
-
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா?
Murungai Keerai Kollu Soup Recipe In Tamil: உங்களுக்கு கை கால் மூட்டு வலி அதிகமா இருக்கா? அடிக்கடி மாலை வேளைகளில் மழை பெய்வதால் உங்கள் வீட்டில் உள்ளோர் சளி தொல்லையால் சிரமப்படுகிறார்களா? அப்படியானால் இப்படியான சூழ்நிலையில் வீட்டில் முருங்கைக்கீரையும், கொள்ளு பருப்பும் இருந்தால், அவற்றைக் கொண்டு சூப் செய்து குடியுங்கள். அதுவும் இந்த சூப்பை குடிக்கும் போது உடலில் இரத்தம் நன்கு ஊறவும் செய்யும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியும் வலுவடையும்.

உங்களுக்கு இந்த முருங்கைக்கீரை கொள்ளு சூப்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை கொள்ளு சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைத்து அரைப்பதற்கு...
* கொள்ளு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 1/4 கப்
* பூண்டு - 2 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* சின்ன வெங்காயம் - 10
* கொத்தமல்லி - சிறிது
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 லிட்டர்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1 துண்டு
* இடிச்ச சின்ன வெங்காயம் - 5
* முருங்கைக்கீரை - 10 இலைகள்
* சூப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை - பாதி
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு சேர்த்து
பொன்னிறமாக வறுத்து இறக்கி, நீரில் ஒருமுறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 1/4 கப் நீரை
ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும். பின் அதில்
பூண்டு, இஞ்சி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி, முருங்கைக்கீரை, சீரகம்,
மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து, 1/2 லிட்டர் நீரை ஊற்றி குக்கரை மூடி 2
விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போன பின் குக்கரைத் அதை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வடிகட்டிய பொருட்களை மிக்சர் ஜாரில்
சேர்த்து, அத்துடன் சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்ததையும் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இடிச்ச சின்ன வெங்காயத்தை சேர்த்து நிறம் மாற வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் 10 முருங்கை இலைகளை சேர்த்து வதக்கி, வடிகட்டி
வைத்துள்ள சூப்பை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கலந்து, மிதமான
தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மிளகுத் தூள், எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத்
தூவி கிளறினால், சுவையான முருங்கைக்கீரை கொள்ளு சூப் தயார்.



Click it and Unblock the Notifications
