Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது?
இன்னைக்கு சிக்கன் வாங்குனா இந்த முகலாய சிக்கன் செய்யுங்க... ராஜா வீட்ல சாப்பிட்ட மாதிரி இருக்கும்...!
Mughlai Chicken Recipe in Tamil: சண்டே என்றாலே பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவு என்றாகிவிட்டது. அசைவ உணவென்றால் அனைவருக்குமே முதலில் நினைவிற்கு வருவது சிக்கன்தான். சிக்கனை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழிகளில் சமைக்கலாம். முகலாயர்கள் காலத்தில் முகலாய மன்னர்களுக்கு பல்வேறு விதமான அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன. அப்படி அவர்களுக்கு பரிமாறப்பட்ட ஒரு சுவையான மற்றும் ஆடமபரமான உணவுதான் முகலாய சிக்கன்.
பாதாம், முந்திரி, பால் என பல பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சிக்கன் கிரேவி சப்பாத்தி, புரோட்டோ போன்றவற்றுக்கு மட்டுமின்றி சாதம், புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த பதிவில் அரச உணவான முகலாய சிக்கனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- நெய் - 3 டேபிள் ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 4 (பெரியது)
- பால் அல்லது தேங்காய் பால் - ½ கப்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
மேரினேட் செய்ய:
- சிக்கன் - 1 கிலோ
- தயிர் - ½ கப் (புளிக்காத கெட்டி தயிர்)
- இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- உப்பு - 1 டீ ஸ்பூன்
வறுத்து அரைக்க:
- பாதாம் - 25 கிராம்
- முந்திரி - 25 கிராம்
- கொத்தமல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் - 4
- கிராம்பு - 3
- பட்டை - 1
- சோம்பு - 1 டீ ஸ்பூன்
- மிளகு - ½ டீ ஸ்பூன்
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- வரமிளகாய் - 4
செய்முறை:
- சிக்கனுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து அலசி எடுத்து வைத்து கொள்ளவும்.
- அதனுடன் புளிக்காத கெட்டி தயிர் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பிரட்டவும்.
- பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- இந்த கலவையை குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கொத்தமல்லி, பாதாம் மற்றும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.
- அதனுடன் ஏலக்காய், கிராம்பு, பட்டை மற்றும் வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.
- கடைசியாக சோம்பு, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைக்கவும்.
- ஈரமில்லாமல் உலர்ந்து இருக்கும் மிக்ஸி ஜாரில் வறுத்து ஆற வைத்த பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து உருக விடவும்.
- அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைத்து தண்ணீர் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- அதே நெய்யில் மேரினேட் செய்து ஊற வைத்த சிக்கன் சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவும்.
- பின் அதில் அரைத்து வைத்த பொடி மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால் அல்லது தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்து 20 முதல் 25 நிமிடங்களுக்கு வேக விடவும்.
- கடைசியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் அட்டகாசமான சுவையில் முகலாய சிக்கன் ரெடி!



Click it and Unblock the Notifications
