Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
முதலியார் ஸ்டைல் ஆம்லெட் கிரேவி
முட்டை கொண்டு தயாரிக்கப்படும் ஆம்லெட்டை வைத்து ஒரு அட்டகாசமான கிரேவி தயாரிக்கலாம் என்பது தெரியுமா? அதிலும் இந்த கிரேவியை சப்பாத்தி அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
இதுவரை முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லெட்டுகளாக செய்தோ தான் நாம் சாப்பிட்டிருப்போம். ஆனால் அப்படி முட்டை கொண்டு தயாரிக்கப்படும் ஆம்லெட்டை வைத்து ஒரு அட்டகாசமான கிரேவி தயாரிக்கலாம் என்பது தெரியுமா? அதிலும் இந்த கிரேவியை சப்பாத்தி அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிபி செய்ய வேண்டுமென்று தோன்றினால், உங்கள் வீட்டில் உள்ளோருக்கு முதலியார் ஸ்டைல் ஆம்லெட் கிரேவி செய்து கொடுங்கள்.

கீழே முதலியார் ஸ்டைல் ஆம்லெட் கிரேவி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: நாவூற வைக்கும்... பஞ்சாபி மட்டன் மசாலா
தேவையான பொருட்கள்:
* முட்டை - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
வெங்காய விழுதிற்கு...
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மல்லி - 1 டேபிள் பூன்
* மிளகு - 2 டேபிள் பூன்
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 4 பற்கள்
* கொத்தமல்லி - சிறிது
* புதினா இலைகள் - சிறிது
* தக்காளி - 1
தேங்காய் விழுதிற்கு...
* துருவிய தேங்காய் - 2 டேபிள் பூன்
* கசகசா - 1 டேபிள் பூன்
தயிருக்கு...
* தயிர் - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1 டேபிள் பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க)
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பேனை அடுப்பில் வைத்து, எண்ணெய் சிறிது ஊற்றி, அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட்டாக போட்டு, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வெங்காய விழுதிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு தேங்காய் மற்றும் கசகசாவைப் போட்டு, நீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்ததாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* பின் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்க வேண்டும். பின்பு அரைத்த தேங்காயை சேர்த்து 20 நிமிடம் வதக்கவும்.
* பிறகு அதில் தயிரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊற்றி, சிறிது நீர் சேர்த்து நன்கு 20 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
* இறுதியில் அதில் ஆம்லெட்டை துண்டுகளாக்கிப் போட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், முதலியார் ஸ்டைல் ஆம்லெட் கிரேவி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
