Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
எளிய முறையில் பாசிப் பருப்பு கிச்சடி ரெசிபி செய்வது எப்படி ?
மூங் தால் ரெசிபி மகாராஷ்டிர ஸ்பெஷல் ரெசிபி ஆகும். இதை பல பண்டிகைகளுக்கும் கடவுளுக்கும் நைவேத்யமாக படைத்து வழிபடுவர். அதை எப்படி செய்வது என்பதை செய்முறை விளக்க படத்துடன் காணலாம்.
பாசி பருப்பு கிச்சடி என்பது தால் கிச்சடி என்று அழைக்கப்படுகிறது. இது காலை உணவிற்கு சிறப்பாக தயாரிக்கப்படும் கிச்சடி ஆகும். மேலும் இதை விநாயகா சதுர்த்தியின் ஸ்பெஷல் உணவாக தயாரித்து கடவுளுக்கு படைப்பர்.
இந்த மூங் தால் கி கிச்சடி பாசி பருப்பையும் அதனுடன் சில சமையல் பொருட்களையும் சேர்த்து செய்யும் ரெசிபி ஆகும். இந்த ரெசிபியை வெங்காயம் ஏதும் பயன்படத்தாமல் விநாயக சதுர்த்தியின் போது கடவுள் கணேசனுக்கு படைத்து மகிழ்வர். இதை வைத்து மேலும் துர்கா பூஜை போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்
இந்த தால் கிச்சடி எளிதாகவும் விரைவாகவும் வீட்டிலேயே செய்யக் கூடிய ஒரு வகை உணவாகும்.
நெய் சொட்ட சொட்ட மிதக்கும் அதன் நறுமணமும் இந்த பாசி பருப்பு கிச்சடியின் டேஸ்ட்டும் உங்கள் பசியை தூண்டும்.
நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இந்த பாசிப்பருப்பு கிச்சடி ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.
மூங் தால் கிச்சடி ரெசிபி வீடியோ

Recipe By: மீனா பந்தரி
Recipe Type: முக்கிய உணவு
Serves: 2
-
பாஸ்மதி அரிசி - 1/2 கப்
பச்சை பாசி பருப்பு உடைத்தது - 1/2 கப்
பெருங்காயம் - 1/4 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
நெய்-1டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 5 கப் (ஊற வைக்க)
-
1.பாஸ்மதி அரிசியை சல்லடையில் போட்டு கொள்ளவும்
2.உடைத்த பச்சை பாசி பருப்பையும் அதனுடன் சேர்க்கவும்
3.இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
4.அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும் நெய் ஊற்றவும்
5.பிறகு சீரகம், பெருங்காயம் போட்டு வதக்கவும். சீரகம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
6.நன்றாக ஊற வைத்து கழுவிய பாஸ்மதி அரிசி மற்றும் பாசி பருப்ப்பை சேர்க்க வேண்டும்.
7. நன்றாக கலந்து கொள்ளவும்
8. மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடியை சேர்க்க வேண்டும்
9. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்
10. கொஞ்சம் உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
11. குக்கரை மூடி 4-5 விசில் வரும் வரை சமைக்க வேண்டும்
12. கேஸ் போகும் வரை காத்திருந்து பிறகு குக்கரை திறந்து நன்றாக கலக்கவும்
13. இப்பொழுது அந்த கிச்சடியை ஒரு பெளலுக்கு மாற்றி பரிமாறவும்.
- 1.கிச்சடி கொஞ்சம் கிரேவியாக இருக்க விரும்பினால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
- 2. தட்டில் பரிமாறும் போது கண்டிப்பாக மறுபடியும் நெய் ஊற்றி பரிமாறவும்.
- பரிமாறும் அளவு - 1கப்
- கலோரிகள் - 180கலோரிகள்
- கொழுப்பு - 5 கிராம்
- புரோட்டீன் - 6 கிராம்
- கார்போஹைட்ரேட் - 36 கிராம்
- சுகர் - 2 கிராம்
படிப்படியான செய்முறை விளக்கம் : மூங் தால் கிச்சடி ரெசிபி செய்வது எப்படி?
1.பாஸ்மதி அரிசியை சல்லடையில் போட்டு கொள்ளவும்
2.உடைத்த பச்சை பாசி பருப்பையும் அதனுடன் சேர்க்கவும்
3.இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
4.அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும் நெய் ஊற்றவும்
5.பிறகு சீரகம், பெருங்காயம் போட்டு வதக்கவும். சீரகம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
6.நன்றாக ஊற வைத்து கழுவிய பாஸ்மதி அரிசி மற்றும் பாசி பருப்ப்பை சேர்க்க வேண்டும்.
7. நன்றாக கலந்து கொள்ளவும்
8. மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடியை சேர்க்க வேண்டும்
9. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்
10. கொஞ்சம் உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
11. குக்கரை மூடி 4-5 விசில் வரும் வரை சமைக்க வேண்டும்
12. கேஸ் போகும் வரை காத்திருந்து பிறகு குக்கரை திறந்து நன்றாக கலக்கவும்
13. இப்பொழுது அந்த கிச்சடியை ஒரு பெளலுக்கு மாற்றி பரிமாறவும்.

Click it and Unblock the Notifications