Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
பச்சை மொச்சை பயறு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
Pachai Mochai Payaru Kootu Recipe In Tamil: தற்போது பச்சை மொச்சை சீசன் என்பதால் மார்கெட்டில் விலைக்குறைவில் மொச்சைக்காய் விற்கப்படுவதைக் காணலாம். இந்த மொச்சைப் பயறு சீசனில் மட்டும் தான் கிடைக்கும். மற்ற காலங்களில் இதைக் காண முடியாது. இந்த மொச்சைப் பயறு தனித்துவமான சுவையைக் கொண்டது.
இந்த மொச்சை பயறைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் பச்சை மொச்சை பயறு கூட்டு. இந்த கூட்டு சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இந்த கூட்டு செய்வது மிகவும் சுலபம். பேச்சுலர்கள் கூட இதை செய்யலாம்.

உங்களுக்கு பச்சை மொச்சை பயறு கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை மொச்சை பயறு கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* அவரைக்காய் - 1/4 கிலோ (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* பச்சை மொச்சை பயறு - 1/4 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3 கைப்பிடி
தாளிப்பதற்கு...
* எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 4 பல்
* பச்சை மிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் அவரைக்காயின் முனைகளை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் நறுக்கிய அவரைக்காய், மொச்சைக்காய், மஞ்சள் தூள்,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் 3 கைப்பிடி நீரை தெளித்து கிளறி, குக்கரை
மூடி அடுப்பில் வைத்து, 3 விசிவ் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டு பற்களை தட்டிப் போட்டு, 2 பச்சை மிளகாயை உடைத்து
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும்
வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் சிறிது உப்பு
மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து குறைவான தீயில் வைத்து
நன்கு எண்ணெய் பிரிய கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள காயை நீருடன் அப்படியே சேர்த்து நன்கு
கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 2 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் துருவிய தேங்காயை
சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான பச்சை மொச்சை பயறு
கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications











