Latest Updates
-
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா?
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா?
Mocha Paruppu Karuvattu Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கருவாடு ரொம்ப பிடிக்குமா? இதனால் அடிக்கடி வீட்டில் கருவாடு செய்வீர்களா? அதுவும் கருவாட்டைக் கொண்டு குழம்பு செய்தால், வெறும் கருவாடு மட்டும் தான் சேர்த்து செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை கருவாட்டு குழம்பு செய்வதாக இருந்தால், அத்துடன் மொச்சை, முருங்கைக்காய், கத்திரிக்காய் ஆகியவற்றை சேர்த்து குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு ருசியாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த மொச்சை பருப்பு கருவாட்டு குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மொச்சை பருப்பு கருவாட்டு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெத்திலி கருவாடு - 200 கிராம்
* மொச்சைப்பருப்பு - 150 கிராம் (குக்கரில் போட்டு 2 விசில் விட்டு
வேக வைத்தது)
* கத்திரிக்காய் - 4 (நறுக்கியது)
* முருங்கைக்காய் - 2 (நறுக்கியது)
* புளி - சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
வதக்கி அரைப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 25
* பூண்டு - 7-8 பல்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல்
* சின்ன வெங்காயம் - 4
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* முருங்கைக்காய்
* கத்திரிக்காய்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* புளிச்சாறு
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த மொச்சை
* நெத்திலி கருவாடு
செய்முறை:
* முதலில் நெத்திலி கருவாட்டை கொதிக்கும் நீரில் போட்டு, கை
பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கருவாட்டை எடுத்து, பின் குளிர்ந்த
நீரில் 3-4 முறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் சீரகம், மிளகு, நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து தீயைக் குறைத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள்
சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய 2 பல் பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய் சேர்த்து 1
நிமிடம் வதக்கி, மூடி வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் காஷ்மீரி மிளகாய் தூளை சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை
சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, குழம்பிற்கு தேவையான அளவு
நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்த மொச்சை பருப்பை சேர்த்து 3-4 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக சுத்தம் செய்த நெத்திலி கருவாட்டை சேர்த்து கிளறி, மூடி
வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மொச்சப்பருப்பு
கருவாட்டு குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications