Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
இட்லி, தோசை-ன்னு எப்பவும் செய்யாம.. காலையில் புதுசா ஒரு டிபன் செய்யணுமா? இத ட்ரை பண்ணுங்க..
Masala Tumbler Idli Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான டிபனை செய்ய நினைக்கிறீர்களா? அதே சமயம் உங்கள் வீட்டில் இட்லி, தோசை மாவும் இல்லையா? அப்படியானால் ரவையும், தயிரும் இருந்தால், அருமையான சுவையில் ஒரு புதுமையான டிபனை செய்யுங்கள்.
இந்த டிபன் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இது சட்டென்று செய்யக்கூடிய வகையிலும், எண்ணெய் அதிகம் சேர்க்காமல் ஆவியில் வேக வைப்பதால் சத்தானதாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த மசாலா இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* புளிக்காத தயிர் - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* ஆப்ப சோடா - 1 சிட்டிகை
மசாலாவிற்கு..
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 2 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க..
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் ரவையை எடுத்து, அதில் 1 கப்
தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து, மூடி வைத்து 10-15
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம்
மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத்
தூள், கரம் மசாலா சேர்த்து குறைவான தீயில் வைத்து 1 நிமிடம் பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்து துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து
கொத்தமல்லியைத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு ஒன்று சேரும்
வரை கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அந்த மசாலாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து டம்ளர் அளவு
நீள்வட்ட வடிவில் உருட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஊற வைத்துள்ள ரவையை கிளறி, சிறிது உப்பு மற்றும் 1 சிட்டிகை
ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் ஒரு டம்ளரை எடுத்து, அந்த டம்ளரில் எண்ணெய் தடவி , பாதி டம்ளர்
கலந்து வைத்துள்ள ரவையை ஊற்றி, உருட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு
மசாலாவை அப்படியே நடுவில் வைத்து, பின் ரவையை ஊற்றி நிரப்பி விட
வேண்டும். இதேப் போன்று மற்ற டம்ளரிலும் இப்படி ஊற்றி வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு இட்லி பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி அடுப்பில் வைத்து,
நீர் நன்கு கொதித்ததும் இட்லி தட்டை உள்ளே வைத்து, அதன் மேல் இந்த
டம்ளரை வைத்து, மூடி வைத்து 15 நிமிடம் இட்லியை வேக வைப்பது போல் வேக
வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை குளிர வைத்து, கத்தியால் முனைகளை கீறிவிட்டு, குப்புறப்
போட்டு தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடனதும்,
மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து,
கொத்தமல்லியைத் தூவி கிளறி, வேக வைத்த இட்லிகளை அதில் போட்டு பிரட்டி
எடுத்துக் கொண்டால், சுவையான மசாலா இட்லி தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications








