Just In
- 5 hrs ago
உங்க குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை 50% தள்ளுபடி விலையில் இப்போதே அமேசானில் வாங்குங்கள்!
- 5 hrs ago
இந்த 7 விஷயம் கனவில் வந்தால் சீக்கிரம் பணக்காரர் ஆக போறீங்கன்னு அர்த்தம்...
- 5 hrs ago
உங்க ஆடையில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை இந்த முறைகளின் மூலம் இருந்த இடம் தெரியாமல் செய்யலாமாம்...!
- 5 hrs ago
எப்பவும் நீங்க அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இந்த 5 விஷயங்கள பண்ணா போதுமாம் தெரியுமா?
Don't Miss
- Finance
உலகில் 50% நிறுவனங்கள் பணிநீக்கம் செய்ய முடிவு.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
- News
காந்தியையே கொன்னவங்க ‘அவங்க’..! என்ன மட்டும் விட்ருவாங்களா என்ன? ஆர்எஸ்எஸ்ஸை சீண்டிய சித்தராமையா!
- Movies
விரைவில் ஓய்வுபெற போகிறேன்..பொன்னியின் செல்வன் விழாவில் விக்ரம் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- Sports
பத்தே பந்து 3 விக்கெட்.. தென்னாப்பிரிக்கா அசுர வேக பந்துவீச்சு.. சிக்கி சின்னா பின்னமான இங்கிலாந்து
- Automobiles
நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல் இப்பவே வெளியானது!.. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!
- Technology
பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் Xiaomi நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப்.!
- Travel
உலக புகைப்பட தினம் 2022: மாயஜால போட்டோக்களை எடுக்க நீங்கள் கட்டாயம் இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
மசாலா பாவ்
உங்களுக்கு வட இந்தியாவில் தெருவோரங்களில் விற்கப்படும் ஸ்நாக்ஸ்கள் பிடிக்குமா? உங்கள் வீட்டிலேயே அந்த ஸ்நாக்ஸ்களை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்களுக்கு மசாலா பாவ் பிடிக்குமா? அப்படியானால் அதை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுங்கள். இந்த மசாலா பாவ் செய்வது மிகவும் ஈஸி. அதோடு பள்ளி முடிந்து பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவதோடு, பசியும் தீரும்.
உங்களுக்கு மசாலா பாவ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா பாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாவ் பன் - தேவையான அளவு
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெண்ணெய் - தேவையான அளவு
* வெங்காயம் - 1 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* பால் பாஜி மசாலா பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது
* எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* ஒரு தட்டையான பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் குடைமிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து 6-7 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் பாவ் பாஜி மசாலா, காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு 5 நிமிடம் கொதிக் வைக்க வேண்டும்.
* பின் அதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லியைத் தூவி நன்க கிளறி இறக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அடுப்பில் அதே பேனை வைத்து, அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து உருகியதும், பாவ் பன்னை இரண்டாக வெட்டி பேனில் வைத்து முன்னும் பின்னும் டோஸ்ட் செய்த பின், அதன் மேல் தயாரித்த மசாலாவை வைத்து எடுத்தால், மசாலா பாவ் தயார்.
Image Courtesy: yummytummyaarthi