இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்...

Posted By:

Mappillai Samba Rice Kanji Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைப்பதற்காக டயட்டில் இருக்கிறீர்களா? இதற்காக காலையில் மிகவும் குறைவாக சாப்பிடுவதோ அல்லது எதையும் சாப்பிடாமலோ இருக்கிறீர்களா? அப்படியானால் இனிமேல் அப்படியெல்லாம் இல்லாமல், காலை வேளையில் கஞ்சி செய்து குடியுங்கள். அதுவும் மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சி உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது.

முக்கியமாக இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும், இந்த கஞ்சியானது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. எடையைக் குறைக்க நினைப்போர் இந்த கஞ்சியை அடிக்கடி செய்து சாப்பிட்டால், உடல் எடையும், தொப்பையும் வேகமாக குறையும்.

Mappillai Samba Rice Kanji How To Make a Mappillai Samba Rice Kanji Recipe

உங்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழை மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்க்து கொள்ளுங்கள்

தேவையான பொருட்கள்:

* மாப்பிள்ளை சம்மா அரிசி - 1 கப் அல்லது 100 கிராம்
* தண்ணீர் - 4 கப் + 1 கப்
* வறுத்த வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* மோர் - சிறிது
* சின்ன வெங்காயம் - சிறிது (பொடியாக நறுக்கியது)

கொள்ளு துவையலுக்கு...

* கொள்ளு - 4 டீஸ்பூன்
* தேங்காய் - 2 பெரிய சில்லு
* வரமிளகாய் - 3
* பூண்டு - 5 பல்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது

செய்முறை:

* முதலில் மாப்பிள்ளை சம்பா அரிசியை நீரில் 2 முறை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய அந்த அரிசியில் 4 கப் நீரை ஊற்றி, 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 4 மணிநேரம் கழித்து, ஒரு பாத்திரத்தில் மாப்பிள்ளை சம்பா அரிசியை ஊற வைத்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அதற்குள் வறுத்த வெந்தயத்தை ஒன்றிரண்டாக பொடித்து, கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் போட வேண்டும்.
* அதன் பின் பூண்டு பற்களை தட்டிப் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் மாப்பிள்ளை சம்பா அரிசியை போட்டு, ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த அரிசியை கொதித்துக் கொண்டிருக்கும் நீருடன் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து, தீயை உயர்த்தி, 1 கப் சுடுநீரை ஊற்றி மீண்டும் 15 நிமிடம் கொதிக்க வைத்து, அரிசியை வேக வைத்து இறக்கி மூடி வைத்து குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து இந்த கஞ்சிக்கு சைடு டிஷ்ஷாக கொள்ளு துவையலை செய்யுங்கள். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு பருப்பை சேர்த்து பொன்னியமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த கொள்ளு விதைகள், தேங்காய், வரமிளகாய், பூண்டு, புளி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரைத் தெளித்து, சற்று கெட்டியாக அரைத்துக் கொண்டால், சுவையான கொள்ளு துவையல் தயார்.
* பின்னர் தயாரித்து வைத்துள்ள கஞ்சியை ஒரு கிண்ணத்தில் சிறிது எடுத்து, அத்துடன் சிறிது மோரை ஊற்றி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து கலந்தால், மாப்பிள்ளை சம்பா அரிசி கஞ்சி தயார்.

Take a Poll
[ of 5 - Users]
Desktop Bottom Promotion