Latest Updates
-
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
1 மாம்பழமும், மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. அள்ளும்..
Mango Poli Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் ஏதாவது கேட்கிறார்களா? தற்போது மாம்பழம் விலைக்குறைவில் கிடைப்பதால், அந்த மாம்பழத்தைக் கொண்டு ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அதுவும் உங்கள் பிள்ளைகளுக்கு போளி என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியென்றால் மாம்பழத்தையும், மைதா மாவையும் கொண்டு அட்டகாசமான சுவையில் மாம்பழ போளியை செய்து கொடுங்கள். இப்படி போளி செய்து கொடுக்கும் போது, பிள்ளைகள் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த மாம்பழ போளியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மாம்பழ போளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 1 1/2 கப்
* உப்பு - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு
* தண்ணீர் - சிறிது
* நெய் - 1/2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* ரவை - 1/2 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* மாம்பழம் - 1
* சர்க்கரை - 1/4 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் மைதாவை எடுத்து, அத்துடன்
சிறிது உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கைகளால் கிளறி
விட வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் எண்ணெயை தாராளமாக ஊற்றி நன்கு பிசைந்து 30 நிமிடம் ஊற
வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் மாம்பழத்தின் தசைப்பகுதியை வெட்டி போட்டு, 1
ஏலக்காயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி சூடானதும், 1/2 கப் ரவையை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* பின்னர் அதில் 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த மாம்பழத்தை சேர்த்து கிளறி, பின் சர்க்கரையை
சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு அல்வா பதத்திற்கு வரும்
வரை கிளறி விட்டு இறக்கி, வெதுவெதுப்பான நிலைக்கு வரும் வரை குளிர
வைக்க வேண்டும்.
* பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது எடுத்து உருட்டி, ஒரு கவரில்
அல்லது வாழை இழையில் எண்ணெய் தடவி வைத்து, தட்டிக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அதன் நடுவே சிறிது மாம்பழ கலவையை எடுத்து உருட்டி வைத்து
மடித்து, கைகளில் எண்ணெய் தடவி தட்டையாக திரட்டிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் தட்டி வைத்துள்ள
போளியை சேர்த்து, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், மாம்பழ
போளி தயார். இதேப் போல் அனைத்து மாவையும் போளியாக சுட்டு
எடுங்கள்.



Click it and Unblock the Notifications
