Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
ஒரு நாள் மட்டும் இந்தியாவின் தலைநகராக இருந்த இந்திய நகரம் எது தெரியுமா? அதற்குப்பின் என்ன நடந்தது தெரியுமா? -
குளிர்காலத்தில் கொள்ளு வெச்சு இப்படி சாம்பார் செய்யுங்க.. சளி, தலை பாரம் தொல்லையே இருக்காது! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? இந்த கொங்கு ஸ்டைல் அப்பள கூட்டு செய்யுங்க - சாதத்தோட சாப்பிட பிரமாதமா இருக்கும் -
சளி Vs ஃப்ளூ காய்ச்சல் Vs நிமோனியா: அறிகுறிகளை வைத்து வித்தியாசத்தை எப்படி அறிவது? விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்.. சனியின் மீது விழும் செவ்வாயின் பார்வை..12 ராசிக்கும் எப்படி இருக்கும்? -
மயில்கள் விஷப்பாம்புகளை சாப்பிட்டாலும் ஏன் உயிரிழப்பதில்லை? அதில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை ரவை இருந்தா.. இப்படி கிச்சடி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்... -
நவம்பர் 12, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணக்கஷ்டம் தீரும் நாளாக இருக்குமாம் -
சூரியன் அனுஷம் நட்சத்திரத்திற்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார்
வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்குசிறந்த காய்கறி. இத்தகைய வெண்டைக்காயை கொண்டு மங்களூர் ஸ்டைல் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? அப்ப மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் செய்யுங்கள்.
வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த காய்கறி. இத்தகைய வெண்டைக்காயைக் கொண்டு மங்களூர் ஸ்டைல் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் செய்யுங்கள். இது சற்று வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. ஆனால் அற்புதமான சுவையைக் கொண்டது. குறிப்பாக இந்த சாம்பாரில் சற்று இனிப்புச் சுவையும் தெரியும்.

உங்களுக்கு மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பாரின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்டைக்காய் - 10 (சற்று நீள நீளமாக வெட்டவும்)
* துவரம் பருப்பு - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* வெல்லம் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெண்டைக்காயை போட்டு, அதில் உள்ள பிசுபிசுப்பு நீங்கி, வெண்டைக்காய் ஓரளவு சுருங்கும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் புளிச்சாறு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* வெண்டைக்காய் நன்கு வெந்ததும், அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பு, உப்பு, வெல்லம் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, மற்றொரு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் ஊற்றி இறக்கினால், சுவையான மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் தயார்.
குறிப்பு:
* உங்களுக்கு பச்சை மிளகாய் சேர்க்க பிடிக்காவிட்டால், அதற்கு பதிலாக சாம்பார் பவுடரை 2 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சற்று வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
