Just In
- 16 min ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 36 min ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 1 hr ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 1 hr ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
Don't Miss
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார்
வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்குசிறந்த காய்கறி. இத்தகைய வெண்டைக்காயை கொண்டு மங்களூர் ஸ்டைல் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? அப்ப மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் செய்யுங்கள்.
வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த காய்கறி. இத்தகைய வெண்டைக்காயைக் கொண்டு மங்களூர் ஸ்டைல் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் செய்யுங்கள். இது சற்று வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. ஆனால் அற்புதமான சுவையைக் கொண்டது. குறிப்பாக இந்த சாம்பாரில் சற்று இனிப்புச் சுவையும் தெரியும்.
உங்களுக்கு மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பாரின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்டைக்காய் - 10 (சற்று நீள நீளமாக வெட்டவும்)
* துவரம் பருப்பு - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* வெல்லம் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெண்டைக்காயை போட்டு, அதில் உள்ள பிசுபிசுப்பு நீங்கி, வெண்டைக்காய் ஓரளவு சுருங்கும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் புளிச்சாறு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* வெண்டைக்காய் நன்கு வெந்ததும், அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பு, உப்பு, வெல்லம் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, மற்றொரு அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் ஊற்றி இறக்கினால், சுவையான மங்களூர் ஸ்டைல் வெண்டைக்காய் சாம்பார் தயார்.
குறிப்பு:
* உங்களுக்கு பச்சை மிளகாய் சேர்க்க பிடிக்காவிட்டால், அதற்கு பதிலாக சாம்பார் பவுடரை 2 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சற்று வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.
Image Courtesy: archanaskitchen