Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
முருங்கைக்காயுடன் மாங்காயை சேர்த்து இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
Manga Murungakkai Poriyal Recipe in Tamil: கோடைகாலம் வந்தாலே மாங்காய் சாப்பிடுவதற்கான காலமாகும். இந்த காலகட்டத்தில் மாங்காயை பல்வேறு வழிகளில் அனைவரும் சாப்பிடுவார்கள். பொதுவாக மாங்காயை சாம்பார், புளிக்குழம்பு, ஊறுகாய் போன்ற பல வடிவங்களில் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் மாங்காயை வைத்து சுவையான பொரியல் கூட செய்யலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? அதிலும் இந்த பொரியலில் முருங்கைக்காய் சேர்த்து செய்யப்படுவதால் இது அனைவருக்கும் பிடிக்கும் சுவையில் இருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ளவர்கள் முருங்கைக்காயை விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு முருங்கைக்காய் இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்கள். அதுவும் இந்த பொரியலில் மாங்காயும் சேர்க்கப்படுவதால் இந்த பொரியலின் சுவை தனித்துவமானதாக இருக்கிறது. இந்த முருங்கைக்காய் மாங்காய் பொரியல் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதம் என அனைத்திற்கும் அட்டகாசமான சைடிஷாக இருக்கும்.
உங்களுக்கு முருங்கைக்காய் மாங்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் மாங்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- மாங்காய் - 1 கப்
- முருங்கைக்காய் - 3
- சின்ன வெங்காயம் - 15
- வர மிளகாய் - 1
- பூண்டு - 5 பல்
- தக்காளி - 1
- உப்பு - தேவையான அளவு
- சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 3 ஸ்பூன்
- எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
- உடைத்த உளுத்தம்பருப்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- முதலில் பச்சைக் மாங்காய், வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு மற்றும் முருங்கைக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டைச் சேர்த்து, 5 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி குழையும் அளவிற்கு வெந்ததும் அதில் நறுக்கிய முருங்கைக்காயை சேர்த்து வதக்கவும்.
- முருங்கைக்காய் ஓரளவிற்கு வெந்ததும் மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கிளறவும்.
- முருங்கைக்காய் வேக 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
- முருங்கைக்காய் வெந்து, தண்ணீர் வற்றியதும், மாங்காயைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் சுவையான மாங்காய்-முருங்கைக்காய் பொரியல் ரெடி!



Click it and Unblock the Notifications
