Latest Updates
-
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க..
மக்கானா ஆலு டிக்கி
மக்கானா ஆலு டிக்கி ரெசிபி செய்வது மிகவும் எளிமையானது மட்டுமின்றி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
மாலை வேளையில் காபி/டீக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அதுவும் வித்தியாசமான, அதே சமயம் மிகவும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட ஆசையா? அப்படியானால் அதற்கு மக்கானா ஆலு டிக்கி சரியாக இருக்கும். அது என்ன மக்கானா என்று நீங்கள் கேட்கலாம். அது வேறொன்றும் இல்லை தாமரை விதைகள் தான் மக்கானா. இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிமையானது மட்டுமின்றி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

உங்களுக்கு மக்கானா ஆலு டிக்கியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதன் செய்முறையைப் படித்து செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று உங்கள் கருத்துக்களை தவறாமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்து மசித்தது)
* மக்கானா - ஒரு கப் (வறுத்து அரைத்துக் கொள்ளவும்)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* சோம்பு - ஒரு டீஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கவும்)
* கரம் மசாலா - அரை டீஸ்பூன்
* மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மக்கானாவை ஒரு வாணலியில் நெய் ஊற்றி லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை இறக்கி, ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை ஒரு பௌலில் போட்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் பிசைந்து வைத்துள்ள கலவையில் சிறிது எடுத்து, கட்லெட் வடிவத்தில் தட்டிப் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாகும் வரை நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து கலவையையும் கட்லெட் வடிவில் தட்டி ப்ரை செய்து எடுத்தால், மக்கானா ஆலு டிக்கி தயார்.



Click it and Unblock the Notifications