Just In
- 3 hrs ago
உங்க குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை 50% தள்ளுபடி விலையில் இப்போதே அமேசானில் வாங்குங்கள்!
- 3 hrs ago
இந்த 7 விஷயம் கனவில் வந்தால் சீக்கிரம் பணக்காரர் ஆக போறீங்கன்னு அர்த்தம்...
- 4 hrs ago
உங்க ஆடையில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை இந்த முறைகளின் மூலம் இருந்த இடம் தெரியாமல் செய்யலாமாம்...!
- 4 hrs ago
எப்பவும் நீங்க அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இந்த 5 விஷயங்கள பண்ணா போதுமாம் தெரியுமா?
Don't Miss
- News
செல்போனில் ‘100’ போட்டோ! தோழிகளை ‘அந்த’ வேலைக்கு அழைத்த குயின் ‘ஸ்வேதா’! திடுக்கிட்ட திருப்பூர்..!
- Sports
பத்தே பந்து 3 விக்கெட்.. தென்னாப்பிரிக்கா அசுர வேக பந்துவீச்சு.. சிக்கி சின்னா பின்னமான இங்கிலாந்து
- Finance
870 பேர் பணி நீக்கம் செய்யப்படலாம்.. கவலையில் வேஃபேர் ஊழியர்கள்..!
- Automobiles
நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல் இப்பவே வெளியானது!.. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!
- Movies
மச்சான்ஸ்க்கு குட் நியூஸ்..இரட்டை குழந்தைகளுடன் கோவிலில் வலம் வந்த நமீதா!
- Technology
பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் Xiaomi நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப்.!
- Travel
உலக புகைப்பட தினம் 2022: மாயஜால போட்டோக்களை எடுக்க நீங்கள் கட்டாயம் இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி
உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான ஒரு சைடு டிஷ் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஒரு மகாராஷ்டிரா ரெசிபியை செய்யுங்கள். அது தான் மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி. இந்த மிளகாய் சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாண்விட்ச் உடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிவப்பு மிளகாய் - 4-5
* பூண்டு - 4-5
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சிவப்பு மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்ததை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதை சட்னியுடன் சேர்த்து கலந்தால், மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி தயார்.
Image Courtesy: yummytummyaarthi