For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி

உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான ஒரு சைடு டிஷ் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஒரு மகாராஷ்டிரா ரெசிபியை செய்யுங்கள்.

Posted By:
|

உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான ஒரு சைடு டிஷ் செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஒரு மகாராஷ்டிரா ரெசிபியை செய்யுங்கள். அது தான் மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி. இந்த மிளகாய் சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாண்விட்ச் உடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

Maharashtrian Red Chilli Chutney Recipe In Tamil

உங்களுக்கு மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சிவப்பு மிளகாய் - 4-5

* பூண்டு - 4-5

* உப்பு - சுவைக்கேற்ப

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1/2 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் சிவப்பு மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அரைத்ததை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு அதை சட்னியுடன் சேர்த்து கலந்தால், மகாராஷ்டிரா ஸ்பெஷல் மிளகாய் சட்னி தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
English summary

Maharashtrian Red Chilli Chutney Recipe In Tamil

Want to know how to make a maharashtrian red chilli chutney at home? Take a look and give it a try...
Story first published: Wednesday, July 20, 2022, 19:50 [IST]
Desktop Bottom Promotion