Latest Updates
-
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா?
மதுரை தக்காளி தண்ணி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. இட்லிக்கு அள்ளும்..
Madurai Thakkali Thanni Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி தான் செய்வீர்களா? அந்த இட்லிக்கு பெரும்பாலும் சாம்பார் தான் சைடு டிஷ்ஷாக இருக்குமா? அப்படியே சட்னி செய்வதாக இருந்தாலும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னியைத் தான் செய்வீர்களா?
உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு தக்காளி சட்னி ரொம்ப பிடிக்குமானால், அடுத்தமுறை இட்லிக்கு தக்காளி சட்னியை செய்யும் போது வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், மதுரை தக்காளி தண்ணி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு குறைவான பொருட்களே போதுமானது.

குறிப்பாக இந்த சட்னி சட்டென்று செய்யக்கூடியவாறு செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். ஒருமுறை இந்த ஸ்டைலில் தக்காளி சட்னியை செய்தால், பின் உங்கள் வீட்டில் இருப்போர் அடிக்கடி இந்த சட்னியை செய்ய சொல்லிக் கேட்பார்கள். இந்த சட்னி இட்லிக்கு மட்டுமின்றி, தோசையுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
உங்களுக்கு மதுரை தக்காளி தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை தக்காளி தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 2 டம்ளர் அல்லது 200 மிலி
* வரமிளகாய் - 10
* தக்காளி - 2
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டம்ளர் அல்லது
200 மிலி நீரை ஊற்றி, நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் 10 வரமிளகாய், 2 முழு தக்காளி மற்றும் நறுக்கிய 3
வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதை 10 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* தக்காளியின் தோல் உரியத் தொடங்கியதும், அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு
தட்டில் வெங்காயம், தக்காளி, வரமிளகாயை எடுத்து போட்டு குளிர வைக்க
வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வேக வைத்த வரமிளகாயை சேர்த்து சிறிது நீரை
ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியின் தோலை நீக்கிவிட்டு தக்காளியை சேர்த்து,
அத்துடன் வெங்காயத்தையும் சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி,
சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, அரைத்த சட்னியை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கினால், சுவையான
மதுரை தக்காளி தண்ணி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications