Latest Updates
-
குரு பெயர்ச்சி 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு எப்படி இருக்கப்போகுது-ன்னு தெரியுமா? -
வீட்டில் விளக்கேற்றும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க - இல்லனா துரதிர்ஷ்டம் வீட்டை வித எப்பவும் போகாதாம் -
கல்யாண வீட்டு பாசிப்பருப்பு கேரட் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நெல்லை ஸ்டைல் அஞ்சு காய் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்த 6 உணவுகளை எப்பவுமே வெறுக்காதீங்க.. கூறும் டாக்டர்! எதுக்குன்னு பாருங்க.. -
இந்தியாவிற்கு 'இந்தியா' என்ற பெயர் எப்படி வந்தது? இந்த பெயர் யாரால் வைக்கப்பட்டது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
2027-ல் ஏழரை சனியால் இந்த 4 ராசிக்காரங்க அதிகமா கஷ்டப்படுவாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 தக்காளியும், 2 ஸ்பூன் பொட்டுக்கடலையும் இருந்தா.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
அக்டோபர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கப் போகுதாம் -
நவம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா?
மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ்
உங்களுக்கு ஒரே மாதிரி உருளைக்கிழங்கு செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் சற்று வித்தியாசமாக மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்குமா? அதனால் அடிக்கடி உருளைக்கிழங்கை உங்கள் வீட்டில் செய்வீர்களா? உங்களுக்கு ஒரே மாதிரி உருளைக்கிழங்கு செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் சற்று வித்தியாசமாக மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்யுங்கள். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதோடு இதை செய்வதும் மிகவும் சுலபம்.

உங்களுக்கு மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்து தோலுரித்தது)
* எண்ணெய் - 1/4 கப்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, ஓரளவாக மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து வெங்காயத்தைப் போட்டு ஒரு 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். வதக்கும் போது கரண்டியால் உருளைக்கிழங்கை நன்கு மசித்து விட வேண்டும்.
* பின்பு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி, கரம் மசாலா சேர்த்து நன்கு 5 நிமிடம் பிரட்டி வேக வைக்க வேண்டும்.
* பின் கடலை மாவு சேர்த்து நன்கு கிளறி, 5-8 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
