Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வீட்டிலேயே மதுரை ஸ்பெஷல் பட்டர் பன் ரெசிபியை செய்வது எப்படி தெரியுமா?
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஸ்வீட் பன் உள்ளதா? அப்படியானால் அந்த ஸ்வீட் பன் கொண்டு மதுரை ஸ்பெஷல் பட்டர் பன் ரெசிபியை செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் ஸ்வீட் பன் உள்ளதா? அப்படியானால் அந்த ஸ்வீட் பன் கொண்டு மதுரை ஸ்பெஷல் பட்டர் பன் ரெசிபியை செய்து கொடுங்கள். இந்த பன்னை வீட்டில் உள்ள 4 பொருட்களைக் கொண்டே செய்யலாம். இந்த பட்டர் பன் செய்வது மிகவும் சுலபம் மற்றும் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக இது ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருப்பதோடு, பசியையும் நன்கு ஆற்றும்.

உங்களுக்கு மதுரை ஸ்பெஷல் பட்டர் பன் ரெசிபியை வீட்டிலேயே எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை ஸ்பெஷல் பட்டர் பன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஸ்வீட் பன் - 4
* வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 6 டேபிள் ஸ்பூன்
* பால் - 6 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பன்னை எடுத்து குறுக்கே வெட்டி விரிக்க வேண்டும். ஆனால் முழுவதுமாக வெட்டக்கூடாது. இதேப் போன்று மீதமுள்ள 3 பன்னையும் வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் பன்களின் மீது வெண்ணெயை சிறிது வைத்து பரப்பி, மேலே சர்க்கரையைத் தூவ வேண்டும்.
* பின்பு அதன் மேலே சிறிது பாலை ஊற்றி, பன்னை மூடி வைத்து லேசாக அழுத்த வேண்டும். இதேப் போன்று மீதமுள்ள 3 பன்னையும் செய்ய வேண்டும்.
* பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், வெண்ணெயை சிறிது போட்டு உருகியதும், பன்னை வைத்து முன்னும், பின்னும் குறைவான தீயில் வைத்து டோஸ்ட் செய்து எடுத்தால், சுவையான மதுரை ஸ்பெஷல் ஸ்பெஷல் பட்டர் பன் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications