Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மதுரை பூண்டு கார சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது..
Madurai Poondu Kara Chutney Recipe In Tamil: தற்போது மழை பெய்து காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், நன்கு காரசாரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதுவும் உங்கள் வீட்டில் காலையில் இட்லி, தோசை செய்வீர்களானால், இந்த காலநிலைக்கு சுறுக்கென்று காரமாக சைடு டிஷ் இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும்.
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கார சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா? இதனால் அடிக்கடி கார சட்னியை செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை கார சட்னியை செய்வதாக இருந்தால், மதுரை பூண்டு கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

முக்கியமாக இந்த சட்னியை செய்தால் 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த சட்னி வேலைக்கு செல்பவர்கள், பேச்சுலர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்னி. இப்படிப்பட்ட சட்னியை தெரிந்து வைத்துக் கொண்டால், அவசர காலத்தில் கைக்கொடுக்கும்.
உங்களுக்கு இந்த மதுரை பூண்டு கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை பூண்டு கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 30 பல்
* சின்ன வெங்காயம் - 5
* வரமிளகாய் - 6
* காஷ்மீரி வரமிளகாய் - 8
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 30 பல் பூண்டு, 5 சின்ன வெங்காயம், 6
வரமிளகாய் மற்றும் 8 காஷ்மீரி வரமிளகாய் சேர்க்க வேண்டும்.
* பின் அதில் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளி மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, நன்கு அரைக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 பெரிய தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து, ஜாரில் சிறிது
எண்ணெய் ஊற்றி அலசி சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால்,
சுவையான மதுரை பூண்டு கார சட்னி தயார்.



Click it and Unblock the Notifications