Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க..
Carrot Rice Recipe In Tamil: உங்கள் பிள்ளைகளுக்கு காலையில் லன்ச் பாக்ஸிற்கு என்ன செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல சத்தான உணவை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கேரட் உள்ளதா? அப்படியானால் அந்த கேரட்டைக் கொண்டு வெரைட்டி ரைஸ் செய்து கொடுங்கள். இந்த கேரட் சாதம் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். மேலும் இப்படி கேரட்டை செய்து கொடுக்கும் போது, கேரட் சாப்பிட மறுக்கும் பிள்ளைகளும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த கேரட் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* குடைமிளகாய் - 1/2 கப்
* கேரட் - 3 (துருவியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* வடித்த சாதம் - 1/2 கப்
* நெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், முந்திரியை சேர்த்து ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து
கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பச்சை மிளகாயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய குடைமிளகாய் மற்றும் துருவிய
கேரட்டை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா
சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வடித்த சாதத்தை சேர்த்து நன்கு ஒன்று சேரும் வரை
கிளறி, நெய் மற்றும் ப்ரை செய்த முந்திரியை சேர்த்து நன்கு கிளறி
இறக்கினால், சுவையான கேரட் சாதம் தயார்.



Click it and Unblock the Notifications
