Latest Updates
-
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
World Sickle Cell Day 2026: அரிவாள் செல் நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
1 கேரட் இருந்தா போதும்.. 10 நிமிஷத்துல லன்ச் பாக்ஸ்-க்கு ஒரு அட்டகாசமான ரெசிபியை ரெடி பண்ணலாம்...
Lunchbox Special Carrot Rice Recipe In Tamil: உங்கள் பிள்ளைகளுக்கு காலையில் லன்ச்பாக்ஸிற்கு என்ன செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்கள் பிள்ளைகளுக்கு வெரைட்டி ரைஸ் என்றால் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி உங்கள் வீட்டில் வெரைட்டி ரைஸ் தான் செய்வீர்களா?
உங்கள் பிள்ளைகள் ஒரே சுவையில் வெரைட்டி ரைஸை செய்து கொடுத்து, வரவர சரியாக சாப்பிடுவதில்லையா? உங்கள் வீட்டில் கேரட் உள்ளதா? அப்படியானால் அந்த கேரட்டைக் கொண்டு, அருமையான சுவையில் கேரட் ரைஸ் செய்து கொடுங்கள். இந்த கேரட் சாதம் மிகச்சிறந்த லன்ச்பாக்ஸ் ரெசிபியாக இருப்பதோடு, குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாக இருக்கும்.

முக்கியமாக இந்த சாதம் செய்வதற்கு 10 நிமிடம் போதும். காலையில் வேலைக்கு செல்பவர்கள் இப்படியான ரெசிபியை தெரிந்து வைத்துக் கொண்டால், ஒவ்வொரு நாளும் காலையில் டக்கென்று வேலையை முடிக்கலாம். அதுவும் கேரட்டை அடிக்கடி குழந்தைகளின் உணவில் சேர்த்து வந்தால், அவர்களின் கண்களில் எந்த பிரச்சனையும் வராது.
உங்களுக்கு கேரட் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 6
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 1 (இரண்டு துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* சாதம் - 1 கப்
செய்முறை:
* முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு துருவி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்
பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் முந்திரியை உடைத்து சேர்த்து வறுத்து, அத்துடன்
கறிவேப்பிலை, பச்சை மிளகாயை உடைத்து சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி
பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி, கேரட்டின் நிறம் மாறி சற்று சுருங்கும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* மிளகாய் தூளின் பச்சை வாசனை போனதும், அதில் 1 கப் சாதத்தை சேர்த்து
2 நிமிடம் நன்கு கிளறி விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால்
சுவையான கேரட் சாதம் தயார்.



Click it and Unblock the Notifications