மதியம் லன்ச் பாக்ஸிற்கு மீல் மேக்கர் வெச்சு 10 நிமிடத்தில் இப்படியொரு ரைஸ் செஞ்சு கொடுங்க..

Posted By:

Lunchbox Recipe In Tamil: உங்கள் பிள்ளைக்கு மதியம் லன்ச் பாக்ஸிற்கு என்ன செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? லன்ச் பாக்ஸிற்கு எப்போதும் ஒரே மாதிரி செய்து கொடுப்பதால், உங்கள் பிள்ளைகள் சரியாக சாப்பிடாமல் கொடுத்து அனுப்பும் சாதத்தை அப்படியே திருப்பி கொண்டு வருகிறார்களா?

அப்படியானால் அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுங்கள். அதுவும் உங்கள் பிள்ளைக்கு மீல் மேக்கர் பிடிக்குமானால், அதைக் கொண்டு அருமையான சுவையில் ஒரு சாதத்தை செய்து கொடுங்கள். இந்த சாதம் செய்ய வெறும் 10 நிமிடங்கள் தான் ஆகும். முக்கியமாக செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

Lunchbox Recipe How To Make a Meal maker Rice Recipe

உங்களுக்கு மீல் மேக்கர் சாதம் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மீல் மேக்கர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வடித்த சாதம்

செய்முறை:

* முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்து பிழிந்து வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து, நன்கு 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் கொத்தமல்லியைத் தூவி வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான மீல் மேக்கர் சாதம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 28, 2024, 7:00 [IST]
Desktop Bottom Promotion