Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் எலுமிச்சை கார சட்னி ரெசிபி... செஞ்சு பாருங்க டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!
Lemon Kara Chutney Recipe in Tamil: காலையும், மாலையும் வந்தாலே பெண்களுக்கு என்ன சமையல் செய்வதென்று யோசித்து முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளது. இட்லி, தோசையென்று மெயின் உணவை எளிதாக செய்து விட்டாலும் அதற்கு என்ன சைடிஷ் செய்வது என்பதுதான் முக்கியமான கவலையாக இருக்கும். அதுவும் எத்தனை சட்னிகள் தெரிந்தாலும், இட்லி, தோசைக்கு என்ன சட்னியை இன்று செய்வது என்று முடிவெடுப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
வழக்கமாக இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி அல்லது கார சட்னிதான் செய்வார்கள். நீங்கள் இன்று வீட்டில் இட்லி தோசை செய்யப்போகிறீர்கள் என்றால், அதற்கு வழக்கமாக செய்யும் சட்னியை செய்யாமல், இந்த எலுமிச்சை கார சட்னியை செய்து பாருங்கள். இந்த எலுமிச்சை கார சட்னி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் வித்தியாசமாக மற்றும் சூப்பராக இருக்கும். இந்த சூப்பரான எலுமிச்சை கார சட்னியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 1 எலுமிச்சை
- 8 சிவப்பு மிளகாய்
- 5 சின்ன வெங்காயம்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 2 நறுக்கிய சின்ன வெங்காயம்
- ¼ ஸ்பூன் கடுகு
- ½ ஸ்பூன் உளுந்தம் பருப்பு
- ½ ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் மிக்ஸியில் சிவப்பு மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பொடியாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- 3-4 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து மேலும் அரைத்து, ஒரே மாதிரியான பதத்தில் வைக்கவும்.
- ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தில் எலுமிச்சை சாறுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அரைத்து வைத்த மிளகாயையும், வெங்காயத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- சட்னி பரிமாறும் பதத்திற்கு வந்ததும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- ஒரு சிறிய கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும், இறுதியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றவும்.
- இந்த சட்னி காரம், புளிப்பு என இரண்டு சுவையும் கொண்டதாக இருக்கும்.
- இந்த புளிப்பான கார சட்னி இட்லி, தோசைக்கு மிகவும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கும்.



Click it and Unblock the Notifications