Latest Updates
-
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை!
மீந்து போன சாதம் இருந்தா அத தூக்கிப் போடாம.. இப்படி ஒருடைம் பூரியை செஞ்சு பாருங்க.. சூப்பரா இருக்கும்...
Leftover Rice Poori And Potato Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் மீந்து போன சாதம் நிறைய இருக்கா? அதை தூக்கி போட மனசு இல்லையா? அப்படியானால் அந்த சாதத்தைக் கொண்டு பூரி செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக உருளைக்கிழங்கு மசாலாவை செய்யுங்கள். இது செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு மீந்து போன சாதம் கொண்டு எப்படி பூரி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன சாதம் கொண்டு செய்யக்கூடிய பூரி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 1
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* அரிசி மாவு - 1 கப்
* சாதம் - 1 1/2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உருளைக்கிழங்கு மசாலாவிற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம்
சேர்த்து முதலில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் அரிசி மாவு, சாதம், உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் 1
டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த மாவை ஒரு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து
குறைவான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்கி, பின் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, கொதிக்க வைக்க
வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வேக வைத்து மசித்துள்ள
உருளைக்கிழங்கை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி 4 நிமிடம்
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* மசாலா நன்கு கொதித்து கெட்டியாக ஆரம்பித்ததும், அதில் கரம் மசாலாவை
சேர்த்து கிளறி, 1 நிமிடம் வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், உருளைக்கிழங்கு மசாலா தயார்.
* அதன் பின் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு கவரில் எண்ணெய் தடவி அதன் நடுவே ஒரு உருண்டையை வைத்து,
மேலே எண்ணெய் தடவிய மற்றொரு கவரை வைத்து, தட்டு கொண்டு ஒருமுறை
அழுத்திவிட வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பூரியை பொரிப்பதற்கு
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள மாவை
சேர்த்து, பொரித்து எடுத்தால், பூரி தயார்.
Image Courtesy: cookpad.com



Click it and Unblock the Notifications








