Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
மீந்து போன சாதம் 1 கப் இருக்கா? அப்ப லேயர் பரோட்டாவை ட்ரை பண்ணுங்க..
Leftover Rice Parotta Recipe In Tamil: உங்களுக்கு பரோட்டா பிடிக்குமா? எப்பவும் கடையில் தான் பரோட்டாவை வாங்கி சாப்பிடுவீங்களா? அப்படியானால் இன்று பரோட்டாவை வீட்டில் செய்யுங்கள். உங்கள் வீட்டில் மதியம் சமைத்த சாதம் மீந்து போயிருக்கா?
அப்ப அந்த சாதத்தை வெச்சு சாப்ட்டான லேயர் பரோட்டாவை செய்யுங்கள். சாதம் கொண்டு பரோட்டாவை செய்யும் போது, பரோட்டா மிகவும் மென்மையாக இருக்கும். முக்கியமாக இதை கொண்டு பரோட்டா செய்யும் போது ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு மீந்து போன சாதம் கொண்டு லேயர் பரோட்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே லேயர் பரோட்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சாதம் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* மைதா - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் சாதத்தை போட்டு, 1/2 கப் நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 கப் மைதா மாவை சேர்த்து, பரோட்டாவிற்கு தேவையான அளவு
உப்பு சேர்த்து, 1/4 கப்பிற்கு சற்று அதிகமாக நீரை ஊற்றி அரைத்துக்
கொள்ள வேண்டும். அப்படி அரைக்கும் போது சற்று இறுக்கமாகத் தான்
இருக்கும். இருப்பினும் இப்படி அரைக்கும் போது மாவு மிகவும் மென்மையாக
இருக்கும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, மேலே 1 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி தடவி, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அரை மணிநேரம் கழித்து, கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு பிசைந்து
வைத்துள்ள மாவை மீண்டும் ஒரு 2 நிமிடம் பிசைந்து விட வேண்டும்.
* பின் அந்த மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு பரோட்டா தேய்க்கும் இடத்தில் எண்ணெய் தடவி, ஒரு உருண்டையை
வைத்து, நன்கு மெல்லிசாக தேய்க்க வேண்டும்.
* பின் அதன் மேல் சிறிது மைதா மாவை தூவி கைகளால் தடவி, தேய்த்த மாவை
எடுத்து, அப்படி கையில் உருட்டி வைக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து
மாவையும் செய்ய வேண்டும்.
* பின்பு உருட்டி வைத்துள்ள பரோட்டாவை மாவை எடுத்து, அதிக அழுத்தம்
கொடுக்காமல் லேசாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும்,
தேய்த்து வைத்துள்ள பரோட்டாவை போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும்
பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். பின் பரோட்டாவை
சூடாக இருக்கும் போது கைகளால் நன்கு அடித்து விட வேண்டும். இதேப் போல்
அனைத்து பரோட்டாக்களையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான லேயர்
பரோட்டா தயார்.



Click it and Unblock the Notifications











