Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
மதியம் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யுங்க..
Leftover Rice Pakoda Recipe In Tamil: மாலை வேளையில் எப்போதும் உங்கள் வீட்டில் உள்ளோர் காபி, டீ குடிக்கும் போது ஸ்நாக்ஸ் கேட்பார்களா? என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலையில் அல்லது மதிய வேளையில் சமைத்த சாதம் மீந்து போயுள்ளதா?
அப்படியானால் அதைக் கொண்டு ஈவ்னிங் டைம்மில் ஒரு அற்புதமான ஸ்நாக்ஸை செய்யுங்கள். அது தான் ரைஸ் பக்கோடா. இந்த ரைஸ் பக்கோடா காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு ரைஸ் பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரைஸ் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சாதம் - 2 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* கடலை மாவு - 1/2 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சாதத்தை எடுத்து, அத்துடன் பொடியாக
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை
கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கலந்து விட வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள், கரம்
மசாலா, பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து க் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு கையால் பிசைந்து விட
வேண்டும்.
* பின் கைகளில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள கலவையை உங்களுக்கு
விருப்பமான வடிவில் நீளமாகவோ அல்லது தட்டையாகவோ தட்டி ஒரு தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், அதில் செய்து வைத்துள்ள பக்கோடாக்களை
போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ரைஸ் பக்கோடா
தயார்.
Image Courtesy: Everyday Gourmet



Click it and Unblock the Notifications
