Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மதியம் மீந்து போன சாதம் 1 கப் இருக்கா? அப்ப ஈவ்னிங் இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க
Leftover Rice Halwa Recipe In Tamil: பொதுவாக அசைவ உணவுகளை உட்கொண்ட பின் நிறைய பேருக்கு ஸ்வீட் ஏதாவது சாப்பிடத் தோன்றும். அதுவும் இன்று விடுமுறை நாள் என்பதால், அனைவரது வீட்டிலும் அசைவ உணவுகளை பலவிதமாக சமைத்து சாப்பிட்டிருப்போம். இந்நிலையில் மாலை வேளையில் ஸ்வீட் ஏதாவது சாப்பிட தோன்றும்.
உங்களுக்கும் அப்படி தோன்றுகிறதா? ஆனால் வீட்டில் ஸ்வீட் எதுவும் இல்லையா? உங்கள் வீட்டில் மதியம் சமைத்த சாதம் மீந்து உள்ளதா? அப்படியானால் அந்த சாதத்தைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு ஸ்வீட் செய்யுங்கள். இந்த ஸ்வீட் வாயில் போட்டதுமே கரையக்கூடிய வகையில் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு மீந்து போன சாதம் கொண்டு எப்படி அல்வா செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன சாதம் கொண்டு செய்யக்கூடிய அல்வாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சாதம் - 1 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10 (துண்டுகளாக்கப்பட்டது)
* நாட்டுச்சர்க்கரை - 1 கப்
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மதியம் மீந்து போன சாதத்தை ஒரு கப்
சேர்த்து, 1/4 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள்
ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக
வறுத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த நெய்யுடன் அரைத்த சாதத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு
நீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும்.
* பின் அதில் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு தீயை அதிகரித்து, 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் ஏலக்காய் பொடி மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு
கிளறி விட்டு இறக்கினால், சுவையான அல்வா தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications