Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சுவையான சுரைக்காய் பாயாசம் செய்யும் முறை!! - வித்யாசமான ரெசிபி!!
லாகி கீ கீர் ரெசிபி மிகவும் எளிதான மனதிற்கு நிறைவளிக்கும் ரெசிபி ஆகும். இந்த ரெசிபியை விரதத்தின் போது செய்வர். இந்த ரெசிபியை வட இந்தியர்கள் தங்களது வீடுகளில் தயாரிக்கும் உணவாகும். இதன் செய்முறை மற்றும
லாகி கீ கீர் ரெசிபி மிகவும் எளிதான மனதிற்கு நிறைவளிக்கும் ரெசிபி ஆகும். இந்த ரெசிபியை விரதத்தின் போது செய்வர். இந்த ரெசிபியை வட இந்தியர்கள் தங்களது வீடுகளில் தயாரிக்கும் உணவாகும்.
லாகி அல்லது சுரைக்காயை வைத்து செய்யப்படும் இந்த ரெசிபியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இதுள்ள நார்ச்சத்து நமது சீரண மண்டலத்தை சீராக இயக்க உதவுகிறது. குறைந்த கொழுப்பு சத்து கொண்டு இருப்பதால் உங்கள் விரத கடைப்பிடிப்பிற்கு இது ஒரு சிறந்த உணவாகும்.
கியா கீ கீர் ரெசிபி செய்வதற்கு எளிதாக இருப்பதால் உங்கள் சமைக்கும் நேரத்தை மிச்சப் படுத்தும்.
சரி வாங்க இப்பொழுது இந்த லாகி கீ கீர் ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.
சுரைக்காய் பாயாசம் ரெசிபி வீடியோ

Recipe By: மீனா பந்தரி
Recipe Type: ஸ்வீட்ஸ்
Serves: 2
-
சுரைக்காய் - 1/2(150 கிராம்)
தண்ணீர் - 2 கப்
நெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
உடைத்த முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
கெவரா எஸன்ஸ் - 1 துளி
-
1. முழு சுரைக்காயை பாதியாக வெட்டி தோலுரித்து கொள்ள வேண்டும். பிறகு சீவுகின்ற கருவியை கொண்டு அதை நைசாக துருவிக் கொள்ள வேண்டும்.
2. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை சூடுபடுத்த வேண்டும்.
3. இப்பொழுது துருவிய சுரைக்காயை அதில் போட்டு 2-3 நிமிடங்கள் சூடு படுத்த வேண்டும்.
4. பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு சுரைக்காயை தனியாக எடுத்து வைக்கவும்.
5. அடுப்பில் சூடான கடாயில் பால் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
6. அதே நேரத்தில் அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றவும்.
7. இப்பொழுது உடைத்த முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.
8. அதனுடன் வடிகட்டி வைத்த சுரைக்காயை போட்டு நன்றாக கிளறவும்.
9. பால் நன்றாக கொதித்ததும் அடுப்பில் உள்ள சுரைக்காய் பாத்திரத்தில் அதை எடுத்து ஊற்றவும்.
10. 5-6 நிமிடங்கள் சமைக்க வேண்டும்.
11. சர்க்கரையை சேர்த்து அது முழுமையாக கரையும் வரை சமைக்க வேண்டும்.
12. பிறகு அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் கெவரா எஸன்ஸ் போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
13. நன்றாக கலக்கி அடுப்பை அணைத்து விடவும்
14. பரிமாறும் கப்பிற்கு மாற்றி பரிமாறவும்.
- 1.தேவை என்றால் இன்னும் மற்றொரு உலர்ந்த பழங்கள் சேர்த்து கொள்ளலாம்.
- 2.சுரைக்காயை துருவிய உடன் சீக்கிரமே தண்ணீரில் கொதிக்க விடுவது நல்லது. இல்லையென்றால் கருப்பு நிறத்தில் மாறி விடும்.
- பரிமாறும் அளவு - 1 கப்
- கலோரிகள் - 168 கலோரிகள்
- கொழுப்பு - 1.1 கிராம்
- புரோட்டீன் - 3.6 கிராம்
- கார்போஹைட்ரேட் - 13.2 கிராம்
- சுகர் - 5.7 கிராம்
- நார்ச்சத்து - 2.5 கிராம்
செய்முறை படத்துடன் விளக்கம் - சுரைக்காய் பாயாசம் ரெசிபி செய்வது எப்படி
1. முழு சுரைக்காயை பாதியாக வெட்டி தோலுரித்து கொள்ள வேண்டும். பிறகு சீவுகின்ற கருவியை கொண்டு அதை நைசாக துருவிக் கொள்ள வேண்டும்.
2. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை சூடுபடுத்த வேண்டும்.
3. இப்பொழுது துருவிய சுரைக்காயை அதில் போட்டு 2-3 நிமிடங்கள் சூடு படுத்த வேண்டும்.
4. பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு சுரைக்காயை தனியாக எடுத்து வைக்கவும்.
5. அடுப்பில் சூடான கடாயில் பால் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
6. அதே நேரத்தில் அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றவும்.
7. இப்பொழுது உடைத்த முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.
8. அதனுடன் வடிகட்டி வைத்த சுரைக்காயை போட்டு நன்றாக கிளறவும்.
9. பால் நன்றாக கொதித்ததும் அடுப்பில் உள்ள சுரைக்காய் பாத்திரத்தில் அதை எடுத்து ஊற்றவும்.
10. 5-6 நிமிடங்கள் சமைக்க வேண்டும்.
11. சர்க்கரையை சேர்த்து அது முழுமையாக கரையும் வரை சமைக்க வேண்டும்.
12. பிறகு அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் கெவரா எஸன்ஸ் போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
13. நன்றாக கலக்கி அடுப்பை அணைத்து விடவும்
14. பரிமாறும் கப்பிற்கு மாற்றி பரிமாறவும்.

Click it and Unblock the Notifications