Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
1/2 கப் வேர்க்கடலையும், வெண்டைக்காயும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸ் செய்யுங்க... செம டேஸ்ட்டா இருக்கும்...
Ladies Finger Peanut Pakoda Recipe In Tamil: குழந்தைகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்ட நிலையில், வீட்டிலேயே எப்போதும் இருப்பதால், எந்நேரமும் ஏதாவது சாப்பிட கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்நிலையில் கடைகளில் எவ்வளவு தான் வாங்கி கொடுக்க முடியும். இப்படிப்பட்ட நேரத்தில் வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது தான் சிறந்தது.
இன்று உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சத்தான, அதே சமயம் சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வேர்க்கடலையும், வெண்டைக்காயும் இருந்தால், சூப்பரான ஸ்நாக்ஸ் செய்யலாம். இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகள் அடிக்கடி கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு வெண்டைக்காய் வேர்க்கடலை பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் வேர்க்கடலை பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த வேர்க்கடலை - 1/2 கப் (100 கிராம்)
* வெண்டைக்காய் - 1/2 கிலோ
* கடலை மாவு - 1/2 கப்
* பச்சரிசி மாவு - 1/2 கப்
* கறிவேப்பிலை - 1 கொத்து (நறுக்கியது)
* பூண்டு - 6 பல் (தட்டிக் கொள்ளவும்)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரகம் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவி, துணியால் துடைத்துவிட்டு,
அதை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வறுத்த வேர்க்கடலையை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக்கப்பட்ட வெண்டைக்காயை போட்டு,
அத்துடன் பொடித்த வேர்க்கடலை பொடியை சேரத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கடலை மாவு, அரிசி மாவு, கறிவேப்பிலை, தட்டிய பூண்டு,
மிளகாய் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சீரகம் சேர்த்து
கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு லேசாக நீரைத் தெளித்து நன்கு கிளறி பக்கோடா பதத்திற்கு கலந்து
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வெண்டைக்காயை சேர்த்து பொன்னிறமாக
பொரித்து எடுத்தால், சுவையான வெண்டைக்காய் பக்கோடா தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications
