Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உடலுக்கு வலு சேர்க்கும் குதிரைவாலி உப்புமா - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?
Kuthiraivali Upma Recipe In Tamil: நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் காலை வேளையில் உடற்பயிற்சிக்கு பின் நல்ல சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். அதுவும் எடையைக் குறைக்க முயற்சிப்பவராக இருந்தால், காலை உணவில் சிறுதானியங்களை சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் சிறுதானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது எளிதில் ஜீரணமாகக்கூடியது. இதனால் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியும்.
சிறுதானியங்களில் பல உள்ளன. அதில் ஒன்று தான் குதிரைவாலி. இந்த குதிரைவாலி அரிசியைக் கொண்டு, கஞ்சி செய்வதற்கு பதிலாக, உப்புமா செய்து சாப்பிட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும். இதுவரை உங்களுக்கு உப்புமா பிடிக்காமல் இருந்தால், குதிரைவாலி அரிசியைக் கொண்டு உப்புமா செய்து சுவைத்து பாருங்கள், நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இந்த உப்புமாவிற்கு தேங்காய் சட்னி அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு குதிரைவாலி உப்புமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குதிரைவாலி உப்புமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குதிரைவாலி அரிசி - 1 டம்ளர்
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 டம்ளர்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குதிரைவாலி அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின்
நீரை ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் உளுத்தம்
பருப்பு, 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் சீரகம்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் 1 கொத்து கறிவேப்பிலை மற்றும் நீளவாக்கில் மெல்லியதாக
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் 1 பச்சை மிளகாயையும்
சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 3 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நீரை
கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் நன்கு கொதிக்க தொடங்கியதும், ஊற வைத்த குதிரைவாலி அரிசியை நீரை
வடிகட்டிவிட்டு சேர்த்து கிளறி, மூடி வைத்து உயர் தீயில் 5 நிமிடம்
வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, ஒருமுறை கிளறி விட்டு, பின்
மீண்டும் மூடி வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால்,
சுவையான குதிரைவாலி உப்புமா தயார்.



Click it and Unblock the Notifications